Author Topic: கான்வீக் ரோல்  (Read 534 times)

Offline kanmani

கான்வீக் ரோல்
« on: November 12, 2013, 02:09:48 PM »

தேவையான பொருட்கள்

கடலைமா - 1கப்
கட்டி தயிர் - 1கப்
பட்டர் - 3மே.க
சோளமா - 1/4கப்
நீர் - தேவைக்கு ஏற்ப
உப்பு - 1கரண்டி

தாளிக்க

எண்ணெய்- 2மே.க
கடுகு - 1/2தே.க.
சீரகம் - 1/2தே.க.
உழுத்தம்பருப்பு - 1தே.க.
கறிவேப்பிலை - சிறிது
மல்லி இலை - சிறிதளவு

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் கடலைமாவை வறுக்காது அதனுடன் சோளமா, கட்டித்தயிர், உப்பு ஆகியவற்றை போட்டு நன்கு சேர்த்து கட்டியில்லாது பிசையவும். அதனுடன் பட்டரும் சிறிது சேர்த்து நன்கு கரைத்து கூழ் பதத்தில் எடுக்கவும். ஒரு வானலியை அடுப்பில் வைத்து சூடாகிய பின் அவ் வானலியில் அடியில் ஒட்டாது இருக்க பட்டரை பூசி விடவும். பின் கூழ்கலவையை கொட்டி களிபோல் கிண்டி எடுக்கவும்.


அது நன்கு வெந்ததும் தட்டையான ஒரு தட்டில் ஊற்றி கரண்டியால் தோசைவார்ப்பது போல் நன்கு மெல்லியதாக பரவி விடவும். அதன்பின் பதினைந்து நிமிடம் கழித்து கத்தியால் நீளமான துண்டுகள் போல் வெட்டி எடுக்கவும். மூன்று அங்குல நீளம், அரை அங்குல அகலமான துண்டுகளாக வெட்டி எடுத்து ரோல் போன்று சுற்றி அழகாக தட்டில் அடுக்கி வைக்கவும்.

அதன் பின் வானலியில் எண்ணெய் ஊற்றி தாளிக்க தேவையான கடுகு, சீரகம், உழுத்தம்பருப்பு ஆகியவற்றை இட்டு தாளிக்கவும். கறிவேப்பிலை, மல்லி இலையையும் சேர்த்துக்கொண்டு பின் அதனை எடுத்து தட்டில் அடுக்கி வைக்கப்படுள்ள சுருள்கள் மேல் பரவி ஊற்றி விடவும். அவ்வளவுதான் கான்வீக் தயார். ஆறியதன் பின் சுவைக்கலாம்