டின் ஃபிஷ் - ஒன்று (நடுத்தரமான அளவு)
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2
பூண்டு - 3 பல்
கறிவேப்பிலை
புளிக்கரைசல் - அரை கப்
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
தாளிக்க:
கடுகு - அரை தேக்கரண்டி
வெந்தயம் - அரை தேக்கரண்டி
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
டின் ஃபிஷ்ஷிலுள்ள தண்ணீரை வடித்து தனியாக வைக்கவும். மீனை முள் நீக்கி வைத்துக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளியை நறுக்கிக் கொள்ளவும். பூண்டை நசுக்கி வைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க வேண்டியவற்றைத் தாளித்து, வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கி தூள் வகைகள் சேர்த்து வதக்கவும்.
பிறகு டின் ஃபிஷ்ஷிலிருந்து வடித்து வைத்துள்ள தண்ணீர், புளிக்கரைசல் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
கலவை நன்கு கொதித்து எண்ணெய் பிரிந்ததும் மீனைச் சேர்த்து 2 நிமிடங்கள் வேகவிட்டு இறக்கவும்.
சாதம், இட்லி, தோசை, இடியாப்பம், புட்டு என எல்லாவற்றிற்கும் ஏற்ற சுவையான டின் ஃபிஷ் கறி தயார்.