Author Topic: கறிவேப்பிலை-பூண்டு குழம்பு  (Read 654 times)

Offline kanmani

என்னென்ன தேவை?

கறிவேப்பிலை -100 கிராம்,
உரித்த பூண்டு - 50 கிராம்,
புளிக்கரைசல் - 50 கிராம்,
பச்சை மிளகாய் - 25 கிராம்,
வெங்காயம் - 50 கிராம்,
தக்காளி - 50 கிராம்,
காய்ந்த மிளகாய் - (உருண்டை மிளகாய்)  15 கிராம்,
நல்லெண்ணெய் - 50 மி.லி.,
கடுகு - 10 கிராம்,
வெந்தயம் - 10 கிராம்,
சீரகம் - 10 கிராம்,
தனியா தூள் - 15 கிராம்,
மஞ்சள் தூள்  -10 கிராம்,
சிவப்பு மிளகாய் தூள்  -10 கிராம்,
உப்பு - தேவைக்கேற்ப.
எப்படிச் செய்வது?

கடாயில் எண்ணெய் காய வைத்து, கடுகு, வெந்தயம், சீரகம், காய்ந்த மிளகாய், பூண்டுப் பல் தாளிக்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, இரண்டாகக் கீறிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள் சேர்த்து, லேசாகத் தண்ணீர் தெளித்து வதக்கவும். புளிக்கரைசல் சேர்த்துக் கொதிக்க விடவும். எண்ணெய் பிரிந்து மேலே வர வேண்டும். சிறிது எண்ணெயில் கறிவேப்பிலையையும் பூண்டையும் வதக்கி அரைத்துக் கொள்ளவும். அதைக் கொதிக்கிற கலவையில் விட்டு, எல்லாம் ஒன்றாகச் சேரக் கிளறி, சூடாகப் பரிமாறவும். எங்களோட ராயல் இண்டியானா ரெஸ்டாரன்ட்டோட ஃபேவரைட் அயிட்டம் இது. சூரக்கோட்டையில நடிகர் திலகம் சிவாஜி சார் வீட்ல இதைக் கத்துக்கிட்டேன்.