என்னென்ன தேவை?
கத்தரிக்காய் - 200 கிராம்,
வெங்காயம் - 50 கிராம்,
தக்காளி - 50 கிராம்,
பச்சை மிளகாய் - 15 கிராம்,
இஞ்சி - பூண்டு விழுது - 25 கிராம்,
மிளகாய் தூள், தனியா தூள்,
மஞ்சள் தூள் - தலா 10 கிராம்,
புளிக்கரைசல் - 30 மி.லி.,
கறிவேப்பிலை - 50 கிராம்,
கொத்தமல்லி - 50 கிராம்,
எண்ணெய் - 15 மி.லி.,
கடுகு - 15 கிராம்,
வெந்தயம் - 5 கிராம்,
சீரகம் - 10 கிராம்,
உப்பு தேவைக்கேற்ப.
எப்படிச் செய்வது?
கடாயில் எண்ணெய் காய வைத்து, கடுகு, வெந்தயம், சீரகம், கீறிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கி, பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு மிளகாய் தூள், மஞ்சள் தூள், தனியா தூள் சேர்த்துக் கிளறி, கிரேவி பதத்துக்குக் கொண்டு வரவும். புளிக்கரைசல் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். கொத்தமல்லித் தழையை தனியே அரைத்து, இந்தக் கலவையில் கொட்டிக் கொதிக்கவிடவும்.கத்தரிக்காயை சுத்தம் செய்து, வகிர்ந்து, எண்ணெயில் பொரித்துத் தனியே வைக்கவும். இதை, கொதித்துக் கொண்டிருக்கிற கலவையில் கொட்டி, வேக விட்டு, எண்ணெய் பிரிந்து வரும் வரை வைத்திருந்து இறக்கவும். இது ஒரு ஆந்திரா ஸ்பெஷல். நடிகர் நாகேஸ்வர ராவ் வீட்ல கத்துக்கிட்டேன். டிரெடிஷனலா இந்த அயிட்டத்தை என்னோட ஸ்டைல்ல கொத்தமல்லி அரைச்சு செய்வேன்.