Author Topic: ஸ்வீட் கார்ன் ரொட்டி  (Read 465 times)

Offline kanmani

ஸ்வீட் கார்ன் ரொட்டி
« on: November 11, 2013, 09:18:47 AM »
தேவையான பொருட்கள்:

மைதா மாவு - 2 கப்
ஸ்வீட் கார்ன் - 2 கப்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
உருளைக்கிழங்கு - 1 (நறுக்கியது)
கொத்தமல்லி - 1 டீஸ்பூன் (நறுக்கியது)
மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, உருளைக்கிழங்கை சேர்த்து கிளறி, உருளைக்கிழங்கை வேக வைக்க வேண்டும்.

 உருளைக்கிழங்கானது நன்கு வெந்ததும், அதில் ஸ்வீட் கார்ன், மிளகாய் தூள், கொத்தமல்லி மற்றும் உப்பு சேர்த்து 15 நிமிடம் நன்கு பிரட்டி, அடுப்பில் இருந்து இறக்கி குளிர வைக்க வேண்டும். பின் ஒரு பௌலில் மைதாவைப் போட்டு, தண்ணீர், மற்றும் உப்பு சேர்த்து, நன்கு மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அதில் 1/2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி தேய்த்து, கல்லானது காய்ந்ததும், தீயை குறைவில் வைத்து, பிசைந்து வைத்துள்ள மைதா சிறிதை எடுத்து, கல்லில் போட்டு, கையால் வட்டமாக பரப்பி, பின் அதன் மேல் வதக்கி வைத்துள்ள ஸ்வீட் கார்ன் கலவையை பரப்பி, மீண்டும் அதன் மேல் மைதாவை பரப்பி, எண்ணெய் ஊற்றி, இரண்டு பக்கத்தையும் நன்றாக வேக வைக்க வேண்டும்.

குறிப்பாக அப்படி வேகும் போது, தோசைக்கரண்டியால் அதனைத் தட்டி விட வேண்டும். இதனால் ரொட்டியானது பிரியாமல் இருக்கும். அதுமட்டுமல்லாமல், ரொட்டியை நன்றாக வேக வைத்து எடுக்க வேண்டும். இதேப் போன்று அனைத்து மாவையும் செய்ய வேண்டும்.