Author Topic: இஞ்சி - வெள்ளரிக்காய் பச்சடி  (Read 397 times)

Offline kanmani

என்னென்ன தேவை?

இஞ்சி - 50 கிராம், '
வெள்ளரிக்காய் - 1 பெரியது,
பச்சை மிளகாய் - 1,
தயிர் - 2 கப்,
தேங்காய்த்துருவல் - 1 டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப (அலங்கரிக்க - ஒரு வெள்ளரிக்காய்).

எப்படிச் செய்வது? 
 
இஞ்சி, தேங்காய்த்துருவல், பச்சை மிளகாயை மிக்ஸியில் நன்றாக அரைக்கவும். வெள்ளரிக்காயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அரைத்த விழுது,  நறுக்கிய வெள்ளரிக்காயை, உப்பு ஆகியவற்றை தயிருடன் சேர்த்து நன்கு கலக்கினால் அசத்தல் பச்சடி ரெடி.  வெள்ளரிக்காயை வட்டமாக வெட்டி  அலங்கரிக்கவும்.

குறிப்பு: தயிர் புளிப்பு இல்லாமல் கெட்டியாக இருக்க வேண்டும். பார்ட்டியின் போது ஜீரணத்திற்கு நல்லது. வெள்ளரிக்கு பதில் மாங்காய், பைன்ஆப்பிள் போடலாம்.