Author Topic: ஸ்டஃப்டு ரைஸ் ரோல்  (Read 417 times)

Offline kanmani

ஸ்டஃப்டு ரைஸ் ரோல்
« on: November 11, 2013, 09:06:50 AM »
என்னென்ன தேவை?

பச்சரிசி - 1 கப், புழுங்கல் அரிசி - 1 கப், எண்ணெய் - 1 டீஸ்பூன், எள் - 1 டீஸ்பூன், பெருங்காயம் - ஒரு சிட்டிகை, தேங்காய் துருவியது - 1/2 கப், பனீர் துருவியது - 1/2 கப், பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது - 1 டீஸ்பூன், இஞ்சி பொடியாக நறுக்கியது - 1/2 டீஸ்பூன், கொத்தமல்லி இலை பொடித்தது - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப, சர்க்கரை - 1 டீஸ்பூன், பொடித்த முந்திரி பருப்பு - 8, திராட்சை - 10, நெய் - 2 டேபிள்ஸ்பூன், எலுமிச்சைச்சாறு - 1 டேபிள்ஸ்பூன்.

எப்படிச் செய்வது?

பச்சரிசி, புழுங்கல் அரிசியை சுத்தம் செய்து 4 மணி நேரம் ஊறவிடவும். பிறகு நைசாக அரைக் கவும். இந்த மாவை 4 மணி நேரம் புளிக்க வைக்கவும். இத்துடன் உப்பு, எள், எண்ணெய் 1 டேபிள்ஸ்பூன் சேர்த்து, தோசை மாவு பதத்தைவிட சிறிது தண்ணீராகக் கலக்கவும். வடம் ஊற்றும் தட்டில் சிறிது நெய் தடவி மெல்லிய தோசையாக ஊற்றவும். அல்லது வேறு ஏதாவது மெல்லிய தட்டில் ஊற்றி பிரஷர் குக்கரில் அல்லது இட்லி பாத்திரத்தில் வைத்து 15 நிமிடம் ஆவியில் வேகவிட்டு எடுத்து தனியாக வைக்கவும்.

பனீர், தேங்காய், பெருங்காயம், இஞ்சி, உப்பு, முந்திரிப் பருப்பு, திராட்சை, சர்க்கரை, மல்லி, எலுமிச்சைச்சாறு, பச்சை மிளகாய் எல்லாவற்றையும் சேர்த்துக் கலந்து பூரணமாக்கவும். பூரணத்தை தோசையின் மத்தியில் வைத்து ரோல் செய்யவும். ஒரு லவங்கத்தைக் குத்திப் பரிமாறவும். ரைஸ் ரோல் ரெடி. க்ரிஸ்பியாக வேண்டும் எனில் எண்ணெயில் பொரித்துப் பரிமாறவும்.