என்னென்ன தேவை?
மைதா மாவு - 1/2 கப், ரவை - 1/4 டீஸ்பூன், ஓமம் - 1/2 டீஸ்பூன், மஞ்சள் தூள் - 1 சிட்டிகை, மிளகாய் தூள் - 1 டீஸ்பூன், வெந்தயக்கீரை (பொடித்தது) - 1/2 டேபிள்ஸ்பூன், எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய் - பொரிப்பதற்குத் தேவையான அளவு.
எப்படிச் செய்வது?
மைதா, ரவை, உப்பு, டேபிள்ஸ்பூன் எண்ணெய், வெந்தயக் கீரை, மஞ்சள் தூள், மிளகாய் தூள், ஓமம் எல்லாவற்றையும் கலந்து கொள்ளவும். கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் தெளித்து சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசைந்து, 10 நிமிடம் மூடி வைக்கவும். அதை ஸ்பைரல் ஷேப்பாக செய்யவும். அதாவது, கொஞ்சம் மாவை எடுத்து, பூரி மாதிரி திரட்டி, புடவை மடிப்புப் போல மடித்து, உருட்டி, தேய்த்து மூன்று சுற்று வரும் மாதிரி செய்து, முனையில் தண்ணீர் தொட்டு அழுத்தி அமுக்கவும். இப்படி மொத்த மாவையும் செய்து கொள்ளவும். சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும். ஆறியதும் எடுத்து வைக்கவும்.
நீரிழிவு உள்ளவர்களும் இதைச் சாப்பிடலாம்