என்னென்ன தேவை?
கேழ்வரகு மாவு - 1/4 கப்,
பச்சரிசி மாவு - 1/2 கப்,
சோயா மாவு அல்லது கடலை மாவு - கால் கப்,
உடைத்த கடலை மாவு - 1/4 கப்,
வெண்ணெய் - 2 டீஸ்பூன்,
வறுத்த எள் - 1 டீஸ்பூன்,
சீரகம் - 1 டீஸ்பூன்,
இஞ்சி, பச்சை மிளகாய் விழுது - 2 டீஸ்பூன்,
தயிர் - 2 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப,
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு.
எப்படிச் செய்வது?
கேழ்வரகு, அரிசி மாவு, கடலை மாவு, உடைத்த கடலை மாவு கலந்து வெண்ணெய் சேர்த்து கலவையை பிரெட் தூள் மாதிரி கலக்கவும். இத்துடன் எள், சீரகம், இஞ்சி, பச்சை மிளகாய் விழுது, தயிர், உப்பு சேர்க்கவும். மிதமான தண்ணீர் சேர்த்து முறுக்கு மாவு பதத்துக்குப் பிசையவும். ஒரு கடாயை சூடாக்கி, எண்ணெய் விட்டு, சூடானதும் முறுக்கைப் பிழிந்து சுட்டெடுத்து காற்று புக முடியாத டப்பாவில் போட்டு வைக்கவும். இந்த முறுக்கு ஆரோக்கியமாக மட்டுமல்ல... ருசியாகவும் கரகரப்பாகவும் இருக்கும்.