என்னென்ன தேவை?
வெள்ளை காராமணி,
கடலைப் பருப்பு, பயத்தம் பருப்பு,
பச்சரிசி (ரவையாக உடைத்தது) - தலா 1/2 கப்,
மிளகு - 10,
காய்ந்த மிளகாய் - 6,
பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை,
சீரகம் - 1 டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப,
துருவிய தேங்காய் - 1/4 கப்,
வெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்,
சோடா உப்பு - ஒரு சிட்டிகை.
எப்படிச் செய்வது?
பருப்பு வகைகளுடன் மிளகு, காய்ந்த மிளகாய், பச்சரிசி சேர்த்து 1 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு, கரகரப்பாக அரைக்கவும். இத்துடன் தேங்காய் சேர்த்து ஒரு சுற்று அரைத்து எடுக்கவும். பெருங்காயத் தூள், உப்பு, வெண்ணெய், சோடா உப்பு, சீரகம் சேர்த்துக் கெட்டியாகப் பிசையவும். சீடை மாவு பதத்துக்கு இருக்க வேண்டும். மாவை பெரிய நெல்லிக்காய் அளவில் உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும். அதிக நேரம் வைத்திருக்காமல் உடனே பொன்னிறமாக பொரித்து எடுத்து, வடித்துப் பரிமாறவும். இது கரகரப்பாக, ருசியாக இருக்கும்.