Author Topic: பேசன் பாப்டி  (Read 477 times)

Offline kanmani

பேசன் பாப்டி
« on: November 11, 2013, 09:03:26 AM »
என்னென்ன தேவை?

கடலை மாவு - 1 கப்,
மைதா - 1/4 கப்,
உளுந்து மாவு - 1/4 கப்,
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்,
சமையல் சோடா - 1/4 டீஸ்பூன்,
பெருங்காயம் - ஒரு சிட்டிகை,
காஷ்மீரி மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்,
சிவப்பு மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப,
எண்ணெய் - பொரிப்பதற்கு.
எப்படிச் செய்வது? 

எண்ணெய் தவிர மற்ற எல்லாவற்றையும் சிறிது தண்ணீர் தெளித்து அதிகம் கெட்டியாகவும் இல்லாமல் அதிகம் இளகியதாகவும் இல்லாமல் சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசைந்து கொள்ளவும். 1/2 மணி நேரம் மூடி வைக்கவும். பிறகு மாவை உருட்டி, பூரிகளாகத் தேய்த்து கத்தியால் மத்தியில் சிறு கீறல் போட்டு வைத்துக் கொள்ளவும். எண்ணெயைக் காய வைத்து, சூடானதும் மிதமான தீயில் பூரிகளை 2-3 ஆகப் போட்டு பொரித்து எடுக்கவும். ஆறியதும் ஸ்டோர் செய்யவும். இது உத்தரப்பிரதேச பதார்த்தம். காரமான ஒரு வகை ஸ்நாக்ஸ். அப்பளம் போல் இருக்கும். காரத்தை விருப்பம் போல் சேர்த்துக் கொள்ளவும்.