Author Topic: ~ 30 வகை பட்ஜெட் சமையல் ~  (Read 2009 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226482
  • Total likes: 28909
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
~ 30 வகை பட்ஜெட் சமையல் ~
« on: November 10, 2013, 09:52:32 PM »
கீரைத்தண்டு பொரியல்



தேவையானவை:
தண்டுக்கீரை - ஒரு கட்டு, தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், பெரிய வெங்காயம் (பொடியாக நறுக்கவும்) - ஒன்று, மிளகுத்தூள் - கால் டேபிள் ஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

தாளிக்க:
கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:
தண்டுக்கீரையை ஆய்ந்து, தண்டை நார் நீக்கிப் பொடியாக நறுக்கி தண்ணீரில் அலசவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் தாளித்து, வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். அதில் நறுக்கிய கீரைத்தண்டைப் போட்டு, பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து லேசாகத் தண்ணீர் தெளித்து மூடி வைத்து, வேக விடவும். அடுப்பில் இருந்து இறக்கும் முன் மிளகுத்தூள், தேங்காய் துருவல் போட்டுக் கிளறி இறக்கவும்.

குறிப்பு:
தண்டுக்கீரையில் மோர்க்கூட்டும், பாசிப்பருப்பு சேர்த்த கூட்டும் செய்யலாம்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226482
  • Total likes: 28909
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை பட்ஜெட் சமையல் ~
« Reply #1 on: November 10, 2013, 09:59:55 PM »
வெண்டைக்காய் ரோஸ்ட்



தேவையானவை:
வெண்டைக்காய் - கால் கிலோ, கடலை மாவு, அரிசி மாவு - தலா 4 டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் - அரை டேபிள்ஸ்பூன், எண்ணெய் - 200 மி.லி., உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
வெண்டைக்காயை கழுவி துணியில் உலர விடவும். அதனை பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்த்தூள், உப்பு எல்லாம் சேர்த்துக் கலந்துகொண்டு அந்த மாவில் வெண்டைக்காயைப் போட்டு நன்றாகப் பிசறி, அதனை எண்ணெயில் போட்டுப் பொரித்து எடுக்கவும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226482
  • Total likes: 28909
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை பட்ஜெட் சமையல் ~
« Reply #2 on: November 10, 2013, 10:05:57 PM »
சுண்டைக்காய் வற்றல் குழம்பு



தேவையானவை:
சுண்டைக்காய் வற்றல் - 20, புளி - பெரிய நெல்லிக்காய் அளவு, சாம்பார் பொடி - 2 டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டேபிள்ஸ்பூன், வெந்தயம் - அரை டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, கடலைப் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், நல்லெண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம், காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு போட்டுத் தாளிக்கவும். இதனுடன் சுண்டைக்காய் வற்றல் போட்டு வதக்கவும். நன்கு வதங்கியதும் அதோடு சாம்பார் பொடி போட்டுக் கொஞ்சம் தண்ணீர் ஊற்றிக் கலக்கவும். ஒரு கொதி வந்தவுடன் கரைத்து வைத்துள்ள புளியைச் சேர்த்து, உப்பு போட்டு நன்கு கொதிக்க விடவும். கொதித்து, வாசனை வரும்போது கறிவேப்பிலை போட்டு இறக்கவும்.
குறிப்பு: இந்த சுண்டைக்காய் வற்றல் குழம்பு பித்தத்துக்கு நல்லது. தயிர்ப் பச்சடி, சுட்ட அப்பளம் இதற்கு சிறந்த காம்பினேஷன்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226482
  • Total likes: 28909
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை பட்ஜெட் சமையல் ~
« Reply #3 on: November 10, 2013, 10:21:06 PM »
கலவைக் கூட்டு



தேவையானவை:
கோஸ் துருவல் - ஒரு கைப்பிடி அளவு, கத்தரிக்காய், கேரட், உருளைக்கிழங்கு, குடமிள காய், தக்காளி - தலா 1, பச்சை மிளகாய் - 2, பாசிப் பருப்பு - ஒரு சிறு கிண்ணம், சீரகம் - அரை டேபிள்ஸ்பூன், தேங்காய் துருவல் - 4 டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
தாளிக்க - கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டேபிள்ஸ்பூன், எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,

செய்முறை:
பாசிப்பருப்பை குழைய வேகவிடவும், எல்லா காய்களையும் பொடியாக நறுக்கி, அளவான தண்ணீரில் வேக வைக்கவும். சீரகம், பச்சை மிளகாய், தேங்காயை அரைத்து காய்களுடன் சேர்த்து, உப்பு சேர்க்கவும். காடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து இறக்கவும்.
குறிப்பு: சமயங்களில் எல்லா காய்களும் சிறிது சிறிதாக மீதம் இருக்கும். அப்படிப்பட்ட நேரத்தில் இப்படி ஒரு கலவை காய் கூட்டு செய்யலாம். சூடான சாதத்துடன் கலந்து சாப்பிடலாம். எல்லா காய்களும் இருப்பதால் தொட்டுக்கொள்ள ஏதும் தேவை இருக்காது.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226482
  • Total likes: 28909
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை பட்ஜெட் சமையல் ~
« Reply #4 on: November 10, 2013, 10:41:05 PM »
தத்துவப் பச்சடி



தேவையானவை:
வேப்பம்பூ - கைப்பிடி அளவு, மாங்காய்த் துண்டுகள் - 2, அச்சு வெல்லம் அல்லது உருண்டை வெல்லம் - 50 கிராம், பச்சை மிளகாய் - (நறுக்கியது) 1, உப்பு - தேவையான அளவு,

தாளிக்க:
கடுகு, உளுத்தம் பருப்பு - தலா கால் டேபிள்ஸ்பூன், எண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன்.

செய்முறை:
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு சேர்த்து தாளித்து, நறுக்கிய பச்சை மிளகாயை சேர்க்கவும். அதில் வேப்பம்பூவைப் போட்டு வதக்கவும். மாங்காய்த் துண்டுகளை வேக விட்டு கரைத்து விடவும். வெல்லத்தை நன்கு பொடித்து, சிறிது உப்பு சேர்த்து எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து கொதிக்க விடவும்.
குறிப்பு: வாழ்க்கை என்பது கசப்பு, இனிப்பு, புளிப்பு என எல்லாம் கலந்தது என்ற தத்துவத்தை உணர்த்த தமிழ் புத்தாண்டு அன்று அனைவரது வீட்டிலும் இந்தப் பச்சடிக்கே முதலிடம்... இன்றும் கூட!

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226482
  • Total likes: 28909
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை பட்ஜெட் சமையல் ~
« Reply #5 on: November 11, 2013, 07:42:09 PM »
கேழ்வரகு மோர்க்கூழ்



தேவையானவை:
கேழ்வரகு மாவு - 200 கிராம், புளித்த மோர் - கால் லிட்டர், மோர் மிளகாய் - 4, பெருங்காயத்தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

தாளிக்க:
கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டேபிள்ஸ்பூன், எண்ணெய் - 6 டீஸ்பூன்

செய்முறை:
கேழ்வரகு மாவுடன் மோர், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கரைத்துக் கொள்ளவும்.கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, மோர்மிளகாய் கிள்ளிப் போட்டு வறுத்து, கரைத்த மாவை ஊற்றி, நன்கு வேகும் வரை கிளறவும். கூழ் பதம் வந்தவுடன் இறக்கவும். சூடாக சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226482
  • Total likes: 28909
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை பட்ஜெட் சமையல் ~
« Reply #6 on: November 11, 2013, 07:45:56 PM »
வெரைட்டி பருப்பு பொடி



தேவையானவை:
கொள்ளு, துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா 4 டேபிள்ஸ்பூன், தனியா - 2 டீஸ்பூன், மிளகு - 10, சீரகம் - ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு - இரண்டு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
கொள்ளு, துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு, தனியா, மிளகு, சீரகம், கடலைப்பருப்பு ஆகியவற்றை கடாயில் எண்ணெய் விடாமல் வறுக்கவும். ஆறியவுடன் மிக்ஸியில் போட்டு நைஸாக அரைத்து, உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்துக் கலக்கவும். பாட்டிலில் கொட்டி, காற்று புகாதவாறு மூடி வைத்தால் ஒரு மாதம் வரை உபயோகிக்கலாம்.
குறிப்பு: வீட்டில் காய்கள் இல்லாத சமயம் இந்தப் பொடி பயன்படும். சுட்ட அப்பளம், தயிர்ப் பச்சடி இதற்கு சிறந்த காம்பினேஷன்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226482
  • Total likes: 28909
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை பட்ஜெட் சமையல் ~
« Reply #7 on: November 11, 2013, 07:48:28 PM »
வாழைப்பூ துவையல்



தேவையானவை:
வாழைப்பூ - 1, புளி - பெரிய நெல்லிக்காய் அளவு, உளுத்தம்பருப்பு - 4 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, இஞ்சி - சிறிய துண்டு, எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
வாழைப்பூ மடல்களைப் பிரித்து பூவை ஆய்ந்து, பொடியாக நறுக்கி அலசவும். கடாயில் எண்ணெய் விட்டு, நறுக்கிய வாழைப்பூவைப் போட்டு நன்கு வதக்கவும். அதனுடன் உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், இஞ்சி ஆகியற்றை சேர்த்து வறுக்கவும். பிறகு உப்பு, புளி சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.
குறிப்பு: இந்தத் துவையல், இஞ்சி மணத்துடன் வித்தியாசமான ருசியில் இருக்கும். இதை சாதத்தில் பிசைந்தும் சாப்பிடலாம்.வாழைப்பூவை தனித்தனியாக உதிர்த்து பஜ்ஜி மாவில் தோய்த்தும் போடலாம்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226482
  • Total likes: 28909
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை பட்ஜெட் சமையல் ~
« Reply #8 on: November 11, 2013, 07:56:57 PM »
முருங்கை இலை பொரித்த குழம்பு



தேவையானவை:
முருங்கைக்கீரை - கைப்பிடி அளவு, பாசிப்பருப்பு, தேங்காய் துருவல் - தலா 1 கப், காய்ந்த மிளகாய் - 1, தனியா - 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
தாளிக்க: கடுகு - 1 டீஸ்பூன், எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை:
பாசிப்பருப்பை குக்கரில் வேக வைக்கவும். முருங்கைக்கீரையுடன் உப்பு சேர்த்து, தனியாக வேக வைக்கவும். தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய், தனியா ஆகியவற்றை வறுத்து மிக்ஸியில் அரைத்து, வெந்த பாசிப்பருப்புடன் சேர்க்கவும். இதை கீரையுடன் சேர்த்து கொதிக்க விடவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து இதில் சேர்க்கவும். பிறகு, இறக்கிப் பரிமாறவும்.

குறிப்பு:
முருங்கைக்கீரை இரும்புச் சத்து நிறைந்தது.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226482
  • Total likes: 28909
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை பட்ஜெட் சமையல் ~
« Reply #9 on: November 11, 2013, 08:01:47 PM »
கொள்ளுப் பொடி



தேவையானவை:
கொள்ளுப் பயறு- 100 கிராம், மிளகு - 10, காய்ந்த மிளகாய் - 4, உளுத்தம்பருப்பு - 4 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
கடாயில் கொள்ளுப் பயறை தனியாக வறுத்துக் கொள்ளவும். மிளகு, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பை ஆகியவற்றையும் வறுத்துக் கொள்ளவும். இவை எல்லாவற்றையும் கலந்து மிக்ஸியில் நன்கு பொடித்து, பெருங்காயத்தூள், உப்பு சேர்த்துக் கலக்கவும்.

குறிப்பு:
இந்தப் பொடி, கொலஸ்ட்ராலைக் குறைக்கவும், இடுப்பெலும்பை வலுப்படுத்தவும் பயன்படும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226482
  • Total likes: 28909
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை பட்ஜெட் சமையல் ~
« Reply #10 on: November 11, 2013, 08:05:04 PM »
வாழைத்தண்டு மோர்க்கூட்டு



தேவையானவை:
வாழைத்தண்டு - ஒரு துண்டு, தயிர் - 200 மி.லி., தேங்காய் துருவல் - ஒரு கப், பச்சை மிளகாய் - 1, உப்பு - தேவையான அளவு.
தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டேபிள்ஸ்பூன், தேங்காய் எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்

செய்முறை:
வாழைத்தண்டை வில்லைகளாக நறுக்கி, நார் எடுத்து பொடியாக நறுக்கி, உப்பு சேர்த்து வேக வைக்கவும். தேங்காய் துருவல், பச்சை மிளகாயை மிக்ஸியில் அரைத்து, தயிரில் கலக்கவும். அதனை வேக வைத்துள்ள வாழைத்தண்டுடன் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடவும். தேங்காய் எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, அதில் சேர்த்து இறக்கவும்.

குறிப்பு:
இந்தக் கூட்டு, தேங்காய் எண்ணெய் வாசனையுடன் மிகவும் ருசியாக இருக்கும். வாழைத்தண்டு சிறுநீரகக் கற்கள் வராமல் தடுக்கும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226482
  • Total likes: 28909
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை பட்ஜெட் சமையல் ~
« Reply #11 on: November 11, 2013, 08:09:54 PM »
கோதுமை ரவை வெஜிடபிள் கொழுக்கட்டை



தேவையானவை:
கோதுமை ரவை - ஒரு கப், நறுக்கிய கேரட், குடமிளகாய் - தலா ஒரு கப், கோஸ் துருவல் - ஒரு கப், இஞ்சி பேஸ்ட் - கால் டேபிள்ஸ்பூன், மிளகு - சீரகத்தூள் - அரை டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, தேங்காய் துருவல் - இரண்டு ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

தாளிக்க:
கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டேபிள்ஸ்பூன், எண்ணெய் - இரண்டு டேபிள்ஸ்பூன்,

செய்முறை:
கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, நறுக்கிய கேரட், குடமிளகாய், கோஸ் துருவல்,தேங்காய் துருவல் போட்டு வதக்கவும். அதனுடன் இஞ்சி பேஸ்ட், பெருங்காயத்தூள், மிளகு - சீரகத்தூள், உப்பு சேர்த்து மீண்டும் நன்கு வதக்கவும். ஒரு பங்கு கோதுமை ரவைக்கு இரண்டு பங்கு தண்ணீர் என்ற விகிதத்தில் தண்ணீர் விட்டு, நன்கு கொதித்ததும் கோதுமை ரவையைத் தூவி கெட்டியாகக் கிளறவும். ஆறியவுடன் மாவை நன்கு பிசைந்து சிறு உருண்டைகளாகப் பிடித்து இட்லித் தட்டில் வைத்து, ஆவியில் வேக விட்டு எடுக்கவும்.
குறிப்பு: எல்லா காய்களும் சேர்த்து இருப்பதால் இதை அப்படியே சாப்பிடலாம். டயாபடீஸ்காரர்களுக்கு மிகச் சிறந்த காலை நேர உணவு இது.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226482
  • Total likes: 28909
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை பட்ஜெட் சமையல் ~
« Reply #12 on: November 11, 2013, 08:27:26 PM »
கீரை - தானிய சுண்டல்



தேவையானவை:
தண்டுக்கீரை இலை - ஒரு கைப்பிடி அளவு, முளைகட்டிய பாசிப்பயறு - கொண்டைக்கடலை - தலா ஒரு கப், பெரிய வெங்காயம் - 1, தேங்காய் துருவல் - 4 டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

தாளிக்க:
எண்ணெய், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்

செய்முறை:
கீரையை ஆய்ந்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தை தோலுரித்துப் பொடியாக நறுக்கவும். பாசிப்பயறு, கொண்டைக்கடலையை தேவையான உப்பு சேர்த்து வேக விடவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, மிளகுத்தூள், பெருங்காயத்தூள், வெங்காயம் போட்டு வதக்கவும். அதில் கீரையைப் போட்டு, உப்பு சேர்த்து வதக்கவும். இறக்குவதற்கு முன் வேக வைத்த தானியங்களைச் சேர்த்து தேங்காய் துருவல் போட்டு நன்கு கிளறி இறக்கவும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226482
  • Total likes: 28909
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை பட்ஜெட் சமையல் ~
« Reply #13 on: November 11, 2013, 08:30:28 PM »
ஸ்பிரிங் ஆனியன் ஊத்தப்பம்



தேவையானவை:
புழுங்கல் அரிசி - 4 கப், உளுத்தம்பருப்பு - 1 கப், பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள், துருவிய கேரட் - தலா 1 கப், பச்சை மிளகாய் (நறுக்கியது) - 1, தோல் சீவி, பொடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு துண்டு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
அரிசி, உளுந்தை தனித்தனியாக ஊற வைத்து அரைத்து, தேவையான உப்பு சேர்த்துக் கலக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயத்தாள், கேரட் துருவல், இஞ்சி எல்லாவற்றையும் சேர்த்து வதக்கி மாவுடன் கலந்து சிறிய ஊத்தப்பமாக வார்க்கவும்.

குறிப்பு:
பார்வைக்கு கலராகவும் சாப்பிட ருசியாகவும் இருப்பதால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். இட்லி மிளகாய்ப் பொடி இதற்கு சிறந்த காம்பினேஷன்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226482
  • Total likes: 28909
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை பட்ஜெட் சமையல் ~
« Reply #14 on: November 11, 2013, 08:32:26 PM »
அகத்திக்கீரை பொரியல்



தேவையானவை:
அகத்திக் கீரை - 1 கட்டு, பெரிய வெங்காயம் - 1, பாசிப் பருப்பு - ஒரு கப், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
அகத்திக்கீரை, பாசிப்பருப்புடன் உப்பு சேர்த்து அளவான தண்ணீரில் வேக வைக்கவும். வெந்தவுடன் தண்ணீரை வடிகட்டவும். பெரிய வெங்காயத்தைப் பொடியாக நறுக்க வும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, காய்ந்த மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கி, வேக வைத்த அகத்திக் கீரை, பாசிப்பருப்புடன் சேர்த்துக் கலக்கவும். கடைசியாக, தேங்காய் துருவல் தூவி, கிளறி இறக்கவும்.

குறிப்பு:
அகத்திக்கீரை குடல்புண்ணுக்கு சிறந்த மருந்து.