உன்னை தனிமையில் வீழ்தியவள் நானோ!
உன்னை உயிரோடு புதைதவள் நானோ!
என் மனதெங்கும் நீயோ!
என் கண்ணீருடன் நானோ!
உன்னை நினைவில் வைக்கவில்லையடா..,
மனதில் வைத்திருக்கிறேன்!
உன்னை கண்ணீராய் நினைக்கவில்லையடா..,
கண்களாய் நினைத்திருக்கிறேன்!
உன்னை வழி துணையாக என்னவில்லையடா..,
வாழ்கை துணையாக எண்ணுகிறேன்!
நீ என்னுடன் இல்லையே,
உயிரில் உணர்கிறேன் உன்னையே...
நீ காற்றில் இல்லையே,
மூச்சு காற்றில் உணர்கிறேன் உன்னையே...
நீ கணவாய் இல்லையே,
ஓவியமாய் உணர்கிறேன் உன்னையே...!
இருந்தும் உன்னை நான் மரிக்கிறேன்!
நீ இன்பம் காண துடிக்கிறேன்!
உடைந்து வரைந்த நெஞ்சமோ,
கலங்கி கொண்டே கொஞ்சமோ,
காதல் ஓவியமாய் உன்னை வரைய ஆசையோ,,,
இன்று காதல் கதையாய் முடிந்தது அவ்வோவியமோ!