Author Topic: ~ கைமா சேமியா ~  (Read 394 times)

Offline MysteRy

~ கைமா சேமியா ~
« on: November 07, 2013, 11:25:27 PM »
கைமா சேமியா



தேவையானவை:
ஆச்சி சேமியா - அரை கிலோ, கொத்திய கறி - 200 கிராம், சின்ன வெங்காயம் - கால் கிலோ, தக்காளி - 2, இஞ்சி - பூண்டு  விழுது - ஒரு டீஸ்பூன், ஆச்சி மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், ஆச்சி மஞ்சள்தூள் - சிறிதளவு, பட்டை - கிராம்பு தூள் - கால் டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2,  தேங்காய்ப் பால் - ஒரு டம்ளர், கொத்தமல்லித் தழை - சிறிதளவு, எண்ணெய் - கால் டம்ளர், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
ஆச்சி சேமியாவை வெறும் வாணலியில் பொன்னிறமாக வறுக்கவும். பிறகு, உப்பு சேர்த்து முக்கால் பதத்துக்கு வேக வைத்து நீரை வடித்து வைக்கவும். சின்ன வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை நறுக்கிக் கொள்ளவும்.
குக்கரில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் நறுக்கிய சின்ன வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் கொத்திய கறியை சேர்த்து, இஞ்சி - பூண்டு விழுது, ஆச்சி மிளகாய்த்தூள், ஆச்சி மஞ்சள்தூள், பட்டை - கிராம்பு தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கி, பிறகு, தேங்காய்ப் பாலை ஊற்றி கொதி வந்ததும், குக்கரை மூடி 2 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
பிறகு, அகன்ற பாத்திரத்தில் வேக வைத்த கிரேவியை கொட்டி, அத்துடன் வடித்து வைத்த சேமியாவை சேர்த்து நன்றாகப் புரட்டி விட்டு மேலே கொத்தமல்லித் தழை தூவி 'தம்’ செய்யவும்.