Author Topic: இராமர் பாலம்!  (Read 463 times)

Offline sameera

இராமர் பாலம்!
« on: November 07, 2013, 11:58:20 AM »
தமிழ்நாட்டில் இராமேஸ்வரம் அருகில் திருப்புல்லாணிக்கரை உள்ளது.

இங்கு கடலுக்குள் நவக்கிரகங்கள் உள்ளன.இங்குள்ள 70 வயதிற்கு மேற்பட்ட பெரியவர்களிடம் பேசிப்பார்த்தால் இராமர் பாலம் முழு நிஜம் என்பது தெரியவரும......்.
மேலே அமெரிக்க விண்வெளி அமைப்பானநாசா எடுத்துள்ள சாட்டிலைட் புகைப்படத்தில் இருப்பது
ராமர் பாலம் தான்.

சுமார் 30 மைல் நீளமும் 3 மைல் அகலமும் கொண்டதாக இது கடலில் முழ்கிக்கிடக்கிறது.
இந்த பாலம் கடல் அலைகளால் உருவாக்கப்படவில்லை.

இதன் முனைகள் உறுதியாக உள்ளன.இதன் வயது சுமார் 17,50,000 ஆண்டுகள் ஆகும்.
நமது இந்துக்காலக்கணக்குப்படி முதல் யுகமான திரேதாயுகத்தின் முடிவில் இராமாயணம் நடைபெற்றது.ராமாயணத்தின் இறுதிக்கட்டத்தில் கட்டப்பட்டதே இந்த ராமர் பாலம்.கி.பி.1450 வாக்கில் இலங்கையை ஆண்ட மன்னன் தினமும் குதிரைவீரர்களிடம் இராமேஸ்வரம் இராமநாதசுவாமிக்கு அபிஷேகம் செய்வதற்கு பால் கொடுத்து அனுப்பியுள்ளான்.

அந்த குதிரைவீரர்கள் இந்த ராமர் பாலம் வழியாக இலங்கையிலிருந்து தினமும் இராமேஸ்வரத்திற்கு வந்து சென்றுள்ளனர்.

இன்று இந்த ராமர் பாலத்தின் வழியாக நடந்தே இலங்கைக்குச் செல்ல முடியும்.பாலத்தின் ஆழம் குறைந்த பட்சம் 5 அடி(ஒரு ஆளின் உயரம்), அதிக பட்சம் 25 அடி(ஐந்து ஆள்களின் உயரம்)என திருப்புல்லாணிக்கரைப்பெரியவர்கள் கூறுகின்றனர்.

நாம் நமது முன்னோர்களின் படைப்புகள், புராதனச்சொத்துக்களைப் போல உருவாக்காவிட்டாலும் பரவாயில்லை;பாதுகாக்கக்கூடச் செய்யவில்லை யெனில் வரலாறு நம்மை மன்னிக்குமா?