Author Topic: ~ கறிவேப்பிலைமிளகு சாதம் ~  (Read 488 times)

Offline MysteRy

கறிவேப்பிலைமிளகு சாதம்



தேவையானவை:
கறிவேப்பிலைத்தூள், மிளகுத் தூள், கடுகு,  இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம்.

செய்முறை:
கறிவேப்பிலையை நிழலில் உலர்த்திப் பொடி செய்துகொள்ள வேண்டும். மிளகையும் பொடித்துக்கொள்ளவும். எண்ணெயில் கடுகு, உளுந்து, சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கி மிளகு மற்றும் கறிவேப்பிலைப் பொடி சேர்த்துக் கலக்கவும். இந்தக் கலவையுடன் வெந்த சாதத்தைக் கலந்து சாப்பிடலாம்.

பலன்கள்:
கறிவேப்பிலை வெறும் மணத்துக்காக மட்டும் சேர்க்கப்படுவது இல்லை. அது ஜீரணத்துக்கும் உகந்தது.
பித்தம், கபம், உடலில் உள்ள நச்சுக்கள் ஆகியவற்றை வெளியேற்றும் தன்மை மிளகுக்கு உண்டு