Author Topic: ~ இலந்தைப் பழப் பாயசம் ~  (Read 462 times)

Offline MysteRy

~ இலந்தைப் பழப் பாயசம் ~
« on: November 02, 2013, 08:22:40 PM »
இலந்தைப் பழப் பாயசம்



தேவையானவை:
இலந்தைப் பழம் - கால் கிலோ, சர்க்கரை - தேவையான அளவு, ஜவ்வரிசி - 50 கிராம், நெய், முந்திரி, திராட்சை, பால் - சிறிதளவு.

செய்முறை:
இலந்தைப் பழத்தை நன்றாகக் கழுவி விதையுடன் அரைத்துக்கொள்ள வேண்டும். இலந்தைப் பழம் கிடைக்காதவர்கள் இலந்தை வடை வாங்கி நீரில் கரைத்துக் கொள்ளலாம். முந்திரி, திராட்சையை நெய்யில் வதக்கி, வேகவைத்த ஜவ்வரிசியுடன் சேர்க்கவேண்டும்.  பிறகு பால், சர்க்கரை சேர்த்து, அனைத்தையும் கொதிக்கவைத்து இறக்கினால் பாயசம் ரெடி.

பலன்கள்:
இலந்தைப் பழத்தில் க்ளூடாமிக் அமிலம் உள்ளது. இது மூளைக்கு நல்ல சுறுசுறுப்பைக் கொடுப்பதால், குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.
 கால்சியம் அதிக அளவில் உள்ளதால் குழந்தைகளின் பல், எலும்புகள் வலுப்பெற உதவும்.