Author Topic: ~ வாழைப்பூ வடகம் ~  (Read 502 times)

Offline MysteRy

~ வாழைப்பூ வடகம் ~
« on: November 02, 2013, 04:01:18 PM »
வாழைப்பூ வடகம்



தேவையானவை:
வாழைப்பூ - 4 மடல்கள், உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - 2 சிட்டிகை, உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
வாழைப்பூவில் உள்ள கள்ளனை ஆய்ந்து, பொடியாக நறுக்கி மோரில் போட்டு வைக்கவும். (இது வாழைப்பூ கருப்பதைத் தவிர்க்கும்). பருப்பு வகைகளை ஊறவைத்து, அதனுடன் காய்ந்த மிளகாய், உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து மிக்ஸியில் இரண்டு சுற்று சுற்றவும். மிகவும் மையாக அரைக்கத் தேவை இல்லை. கடைசியாக வாழைப்பூவைப் பிழிந்து எடுத்து, இந்தக் கலவையுடன் சேர்த்து, மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும். இதை, சிறு சிறு உருண்டைகளாகக் கிள்ளியோ, சிறிய அடையாகத் தட்டியோ வெயிலில் நன்கு உலர்த்திப் பத்திரப்படுத்தவும். இந்த வடகத்தை, எண்ணெயில் வறுத்துப் பயன்படுத்தலாம். காரக்குழம்புக்கு வறுத்தும் சேர்க்கலாம்.

பலன்கள்:
மாதவிடாய்க் காலங்களில் அதிக ரத்தப்போக்கு மற்றும் மெனோபாஸ் காலத்தில் ஏற்படும் பிரச்னைகளைத் தீர்க்கும். 
அதிக ரத்தப்போக்கை (அது மூலமாக இருந்தால்கூட) நிறுத்த வல்லது.