Author Topic: காஜு கத்லி  (Read 456 times)

Offline kanmani

காஜு கத்லி
« on: October 31, 2013, 11:04:18 PM »
என்னென்ன தேவை?

முந்திரி - 250 கிராம்,
சர்க்கரைத் தூள் - 200 கிராம்,
ஏலக்காய் தூள் - ஒரு டீஸ்பூன்,
பால் - கால் கப்,
வெண்ணெய் அல்லது நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்.
எப்படிச் செய்வது?
 
முந்திரிப் பருப்பை கழுவி சுத்தம் செய்து பாலில் ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பாலை வடிகட்டி ஊறிய முந்திரிப் பருப்பை தூளாக அரைக்கவும்.  சர்க்கரை மற்றும் ஏலக்காய் தூளை முந்திரிக் கலவையுடன் சேர்த்து நன்கு கலக்கவும். அடிப்பகுதி கனமான பாத்திரத்தில் நெய் ஊற்றி சூடாக்கவும்.  அதில் கலந்து வைத்திருக்கும் கலவையைப் போட்டு மிதமான தீயில் 10 நிமிடம் கிளறிக்கொண்டு இருக்கவும். பிறகு தட்டில் கொட்டி ஆறவிடவும்.  இதனை மெல்லிய பேப்பரில் வெண்ணெய் தடவி, அதன்மேல் கலவையைப் பரப்பி, ரோல் மாதிரி சுருட்டவும். பிறகு டைமண்ட் சைஸில் பேப்பருடன்  சேர்த்து வெட்டி எடுக்கவும். இதனை 10-15 நாட்கள் வைத்திருந்து சாப்பிடலாம்