Author Topic: ரவா - கேரட் லட்டு  (Read 414 times)

Offline kanmani

ரவா - கேரட் லட்டு
« on: October 31, 2013, 11:01:05 PM »
என்னென்ன தேவை?

ரவை - ஒரு கப்,
சர்க்கரைத் தூள் - அரை கப்,
துருவிய கேரட், பால் - தலா கால் கப்,
நெய் - 4 டீஸ்பூன்,
உலர்ந்த திராட்சை - 2 டீஸ்பூன்,
ஏலக்காய் தூள் - ஒரு டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?

உலர்ந்த நிலையில் இருக்கும் ரவையை நான்-ஸ்டிக் கடாயில் 5 முதல் 6 நிமிடங்களுக்கு பொன் நிறம் வரும் வரை வறுத்து எடுத்துக்கொள்ளவும்.  பிறகு, பாத்திரத்தில் நெய் ஊற்றி, வறுத்து வைத்திருக்கும் ரவை, உலர்ந்த திராட்சை, துருவிய கேரட், சர்க்கரை, ஏலக்காய் தூள், பால் அனைத்தையும்  சேர்த்து 4 அல்லது 5 நிமிடங்களுக்கு கலவை சுண்டி வரும் வரை கிளறவும். பின் மிதமான சூட்டுடன் சிறு சிறு உருண்டைகளாக பிடிக்கவும். சூடு  ஆறியபின் காற்று புகாத டப்பாவில் போட்டு வைக்கவும். வேண்டும்போது எடுத்துப் பரிமாறலாம்.