Author Topic: நாண்  (Read 429 times)

Offline kanmani

நாண்
« on: October 31, 2013, 10:54:24 PM »

    மைதா மாவு - 400 கிராம்
    ஈஸ்ட் - 2 தேக்கரண்டி
    ஆலிவ் ஆயில் - 2 தேக்கரண்டி
    தயிர் - ஒரு கப்
    பால் - 2 மேசைக்கரண்டி
    உப்பு - ஒரு தேக்கரண்டி
    பட்டர் - சிறிது (மேலே தடவுவதற்கு)
    தண்ணீர் - அரை கப்

 

 
   

தேவையான பொருட்களைத் தயாராக எடுத்துக் கொள்ளவும்.
   

வெதுவெதுப்பான தண்ணீரில் ஈஸ்ட்டை கலந்து வைக்கவும். மைதா மாவுடன் ஈஸ்ட், தயிர், ஆலிவ் ஆயில், வெதுவெதுப்பான பால் மற்றும் உப்பு சேர்த்து பிசைந்து 2 மணி நேரம் வைத்திருக்கவும்.
   

2 மணி நேரத்திற்கு பிறகு மாவு மேலே எழும்பி இருக்கும்.
   

பிறகு மாவை உருட்டி சற்று பெரிய சப்பாத்தி போல போட்டுக் கொள்ளவும்.
   

அடுப்பில் தவாவை வைத்து சூடானதும் பட்டர் தடவி, அதில் நாணைச் சுட்டு எடுக்கவும். (இருபுறமும் வேகுமளவு திருப்பி போட்டு சுட்டு எடுக்கவும்).
   

சுவையான நாண் ரெடி. விரும்பிய கிரேவியுடன் பரிமாறவும்.