Author Topic: உருளைக்கிழங்கு சாதம்  (Read 471 times)

Offline kanmani

உருளைக்கிழங்கு சாதம்
« on: October 28, 2013, 12:13:53 PM »

    அரிசி - ஒன்றரை கப்
    உருளைக்கிழங்கு - 250 கிராம்
    சோயா உருண்டைகள் - 20 கிராம்
    பெரிய வெங்காயம் - 3
    தக்காளி - 2
    கறிவேப்பிலை
    பூண்டு - 5 பல்
    மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
    மிளகாய் தூள் - காரத்திற்கேற்ப
    சோயா சாஸ் - 2 தேக்கரண்டி
    தக்காளி சாஸ் - 2 தேக்கரண்டி
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு
    தாளிக்க:
    கடுகு - அரைத் தேக்கரண்டி
    பட்டை - 2 துண்டு

 

 
   

அரிசியை வேகவைத்து உதிர் உதிராக வடித்து ஆறவைக்கவும். உருளைக்கிழங்கை அரை வட்டவில்லைகளாக நறுக்கி பொன்னிறமாகப் பொரித்து எடுத்துக் கொள்ளவும். சோயா உருண்டைகளை வெந்நீரில் போட்டு உப்பு சேர்த்து 10 நிமிடங்கள் ஊறவைத்துப் பிறகு பொரித்துக் கொள்ளவும். வெங்காயத்தை நீளமாக நறுக்கவும். அதில் பாதியளவு வெங்காயத்தை மட்டும் பொன்னிறமாக பொரித்து எடுத்து வைக்கவும். பூண்டை நசுக்கிக் கொள்ளவும்.
   

கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க வேண்டியவற்றைத் தாளித்து, மீதியுள்ள வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
   

தக்காளி குழைய வதங்கியதும் தூள் வகைகள் மற்றும் சாஸ் வகைகள் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கிக் கொள்ளவும்.
   

அதனுடன் பொரித்த உருளைக்கிழங்கு, சோயா உருண்டைகள் மற்றும் உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் தெளித்து மசாலா சேரும் வரை வேகவிடவும்.
   

அனைத்தும் சேர்ந்து வந்ததும் சாதம் மற்றும் பொரித்த வெங்காயம் சேர்த்து நன்கு கலந்து இறக்கவும்.
   

லஞ்ச் பாக்ஸுக்கு கொடுத்துவிட சுவையான உருளைக்கிழங்கு சாதம் தயார்.