Author Topic: ~ ரத்த தானம்... யாரெல்லாம் கொடுக்கலாம்... எப்படி கொடுக்கலாம்? ~  (Read 387 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227424
  • Total likes: 29050
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
ரத்த தானம்... யாரெல்லாம் கொடுக்கலாம்... எப்படி கொடுக்கலாம்?



யாரெல்லாம் ரத்த தானம் செய்யலாம்?
18 - 60 வயது வரையுள்ள எல்லா ஆண்களும், பெண்களும் ரத்த தானம் செய்யலாம்.
 ரத்த தானம் செய்பவரின் எடை குறைந்தபட்சம் 45 கிலோ இருக்க வேண்டும்.
 ஹீமோகுளோபின் அளவு 12.5 கிராமுக்கு மேல் இருக்க வேண்டும்.
 ரத்த அழுத்தம் இயல்பாக இருக்க வேண்டும்.

யாரெல்லாம் ரத்த தானம் செய்வதை தவிர்க்க வேண்டும்?
 கர்ப்பிணிகளும், குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டும் பெண்களும் தவிர்க்க வேண்டும்.
 பெரிய அறுவை சிகிச்சை செய்துகொண்ட 6 மாதங்களுக்குள்ளும், சிறிய அறுவை சிகிச்சை செய்துகொண்ட 3 மாதங்களுக்குள்ளும் ரத்த தானம் செய்வதை தவிர்க்கவும்.
 மலேரியா நோய் சிகிச்சை பெற்ற மூன்று மாதங்களுக்கு தவிர்க்கவும்.
 மஞ்சள்காமாலை சிகிச்சை பெற்ற 6 மாதங்கள் வரை தவிர்ப்பது நல்லது.
 பால்வினை/ஹெச்.ஐ.வி. பாதிப்புள்ளவர்கள் ரத்த தானம் செய்யக் கூடாது.
 மாதவிடாய் நேரங்களில் பெண்கள் ரத்த தானம் செய்ய வேண்டாம்.