Author Topic: ~ வெஜிடபிள் வரகு கஞ்சி ~  (Read 459 times)

Online MysteRy

~ வெஜிடபிள் வரகு கஞ்சி ~
« on: October 25, 2013, 07:32:38 PM »
வெஜிடபிள் வரகு கஞ்சி


தேவையானவை:
 வரகு அரிசி - ஒரு கப், முட்டைகோஸ் - கால் கிலோ, முள்ளங்கி, தக்காளி, பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், எலுமிச்சம்பழம் - தலா ஒன்று, அரிசி மாவு  - ஒரு டீஸ்பூன் இஞ்சித் துருவல் - சிறிதளவு, கொத்தமல்லி - அரை கட்டு, புதினா - கால் கட்டு, மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், பூண்டு பல் - சிறிதளவு, எண்ணெய் - 4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
ஒரு கப் வரகு அரிசியுடன் மூன்று கப் தண்ணீர், சிறிதளவு உப்பு சேர்த்து, குக்கரில் வேக வைத்து ஒரு விசில் வந்ததும் இறக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, இஞ்சித் துருவல், நறுக்கிய பூண்டு, கீறிய  பச்சை மிளகாய், அரிசி மாவு சேர்த்து நன்கு வறுக்கவும். முட்டைகோஸ், முள்ளங்கியை துருவி, இதனுடன் சேர்த்து, ஒரு நிமிடம் கிளறி... ஒரு லிட்டர் தண்ணீர், தேவையான உப்பு சேர்க்கவும். மிகவும் பொடியாக நறுக்கிய தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி இலை, புதினா இலை சேர்த்து, 5 நிமிடம் கொதிக்கவிடவும். பிறகு, மிளகுத்தூள் சேர்த்து, எலுமிச்சம்பழம் பிழிந்து இறக்கவும். வெந்த வரகு அரிசியுடன், இதனை சேர்த்து நன்கு கலக்கினால்... வெயிலுக்கு இதமான, மிகவும் ருசியான, சத்தான வெஜிடபிள் வரகு கஞ்சி தயார். இதற்கு தொட்டுக் கொள்ள, கொள்ளுத் துவையல் சிறந்தது.