Author Topic: ~ தக்காளி பர்ஃபி ~  (Read 398 times)

Offline MysteRy

~ தக்காளி பர்ஃபி ~
« on: October 23, 2013, 10:16:47 PM »
தக்காளி பர்ஃபி




தேவையானவை: 
பெங்களூர் தக்காளி - 5, சர்க்கரை, தேங்காய் துருவல் - தலா ஒரு கப், முந்திரி - ஒரு கைப்பிடி அளவு, நெய் - 4 டீஸ்பூன்.

செய்முறை:
தக்காளிப்பழத்தை சுடுநீரில் போட்டு... தோல், விதை நீக்கி விழுதாக அரைத்துக் கொள்ளவும். வாணலியில் நெய் விட்டு தக்காளி விழுது, சர்க்கரை சேர்த்து வதக்கவும். பாதி வற்றியதும் தேங்காய் துருவலை சேர்த்துக் கிளறவும். வாணலியில் ஒட்டாமல் சுருண்டு வரும்போது நெய் தடவிய தட்டில் பரவலாக போட்டு, சூடு ஆறும் முன்பு முந்திரிப் பருப்பை தூவி அழுத்தவும். ஆறியதும் துண்டுகள் போடவும்.