Author Topic: தீபாவளி சிறப்பு கவிதை நிகழ்ச்சி  (Read 1143 times)

Offline Forum

நண்பர்களுக்கு .... எதிர்வரும் தீபாவளி தினத்தை முன்னிட்டு ... சிறப்பு கவிதை நிகழ்சிக்காக தங்கள் வாழ்த்துகளை தாங்கிய கவிதைகளை ஏந்திவர நண்பர்கள் இணையதள வானொலி  காத்திருகிறது ...  உங்கள் வாழ்த்துகள் கவிதைவடிவில் நண்பர்களை சென்றடைய ஆசைப்படுகின்றீர்களா ... எதிர்வரும் 27 ஆம் தேதிக்கு  முன்னர் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம் ...

கவிதைகள் அதிகமாக பதிவிடும் பட்சத்தில் குறிபிட்ட அளவு கவிதைகள் வந்ததும் ... குறிபிட்ட தேதிக்கு  முன்னர் பதிவு அனுமதி மூடப்படும் .. எனவே தங்கள் கவிதைகளை விரைவாக பகிருமாறு கேட்டுக் கொள்கிறோம்

தீபாவளி திருநாளில் நண்பர்கள் வானலை வழியே உங்கள் கவிதைகள் ஒலிக்கட்டும் ... உளம் மகிழட்டும் .

Offline SowMiYa

  • Full Member
  • *
  • Posts: 179
  • Total likes: 23
  • Total likes: 23
  • Karma: +0/-0
  • Gender: Female
  • உன்னை அதிகமாக சந்தோஷப்படுத்தும் இதயத்திற்கு உன்னை அழவைக்கவும் உரிமை உண்டு.
    • http://www.friendstamilchat.com/chat/
ரசித்ததில் ஒன்று.
அதிகாலை எழுந்ததும்
ஆசை முகத்துடன்
ஓசை நயம் கண்டு
ஒய்யாரமாய் நடைநடந்து
வாசல் வெளியில் சென்று
வண்ண வண்ண
வான வெடிகளை
பார்த்தபடியே
கொஞ்சும் மழலை
முகத்துடன்
முகம் நோக்கின் தாயின்
வாய்மொழியில்
தலைமுதல் பாதம்வரை
தழுவிடும்
மூவண்ண எண்ணையில்
முத்து குளியல் கண்டு
முழுமுதற் கடவுளின்
வரம் பல கொண்டு
புத்தாடை மேனியிலே
புதுபுது ரகத்துடன்
அணிகலன்கள் பூட்டி
அன்னையின் ஆசிர்வாதத்துடன்
இனிப்புகள் உண்டு
வெடிக்கு வெடி சத்தத்தில்
வெள்ளை மனதும்
கொள்ளை கொள்ளும்
இரவில்
மனதில் இருக்கும்
இருட்டை விலக்கி
வெளிச்சம் கொண்டு
வாழ்வதே தீபாவளி திருநாள்



அசுரன்  அழிந்து
ஆனந்தம்  கிடைத்ததை  போல
நம்  வாழ்வில்  உள்ள
எல்லா  தடை  கற்களும்
படிகற்களாக  மாறி
துன்பங்கள்   நீங்கி  இன்பங்கள்  மலர 

என்   இனிய  தீபாவளி  வாழ்த்துக்கள்


Offline பவித்ரா

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 621
  • Total likes: 929
  • Total likes: 929
  • Karma: +0/-0
  • மாற்றம் ஒன்று தான் மாறாதது ........
ஐப்பசி மாதத்தில் அடைமழையுடன்
பெரும் மகிழ்ச்சியாய் வரும்
என் இனிய தீபாவளியே
நீ வரும் நாளில் நான் விரும்பி கேட்பது ....

இயந்திர வாழ்க்கையை தள்ளி வைத்து
குடும்பத்தோடு கூடி மகிழசொல் .
முதியோரை தனியாய் ஒதுக்காமல்
தகுந்த பாசத்தையும் கவனிப்பையும் கொடுத்து
அவர்களின் அன்பையும் ஆசியையும் பெற சொல் ...

கணவனை பாடாய் படுத்தி பட்டு எடுத்தாலும் சரி
பாதி தள்ளுபடியில் அவனுக்கு ஒரு அரை கை
சட்டை எடுத்தாலும் சரி விட்டுகொடுத்து
 மனம் கோணாமல் உடுத்த சொல் ...

தங்களின் விருப்பத்தை சொல்லி
பெற்றவர்களின் போனசுக்கு வேட்டுவைத்து
வாங்கிய பொருளை மற்ற பிள்ளைகளோடு
பகிர்ந்து விளையாட சொல் ....

அழகிய வண்ணங்களை ஒருங்காய்  இணைத்து
அழகாய் இருக்கும் பூமியை கந்தக புகையில்
கசக்காமல் சுற்றுபுறத்தை மாசுபடுத்தாமல்
அப்படியே அடுத்த தலைமுறைக்காக
விட்டு வைக்க சொல் ...

இன்றைய பொழுதாவது வாடிய
வயிறில்லாமல் இருக்க செய் .
மகிழ்ச்சியோடு உணவையும் பகிர்ந்து
இல்லாதவன் என்ற வார்த்தையை
இல்லாமல் செய்ய சொல் ...

ஆணவ போதையில் மிதக்காமல்
சாலைவிதியை மதித்து விபத்து
 இல்லாமல் காளையரை
மகிழ்ச்சியோடு கொண்டாட சொல் ...

எவ்வளவு தான் பெண்ணியம் பேசினாலும்
சம உரிமை கிடைத்த பாடு இல்லை
சத்தம் போடாமல் சட்டம் போட்டு
வஞ்சகனை வதம் செய்ய சொல் ...

ஒரு அசுரனை வதைததை மகிழ்வாய்
 கொண்டாடும் மக்களை ஒன்றும் அறியாத
 பிஞ்சை நசுக்கி கொள்ளும் அரக்கனை
தேடி தேடி வதம் பண்ண  சொல் ...

இது எல்லாம் ஒரு நாள் சாத்தியமானால்
இனிதாய் நடந்தால்
நம் வாழ்வில் தினம் தினம்
தீபாவளி தான் ....
என்னை  எடை  போடுவதற்கு நீங்கள் தராசும் அல்ல  . நான் விலை பொருளும் அல்ல .....

Offline Maran

தீபாவளி !
எதற்கு  இந்த தீபாவளி  ?..


இதிகாச கற்பனையில்
எனக்கு நம்பிக்கையில்லை


நான் நிகழ்காலத்தில் வாழ்பவன்

இந்தியாவில் ஒரு பகுதி
என்னக்கு சொந்தம்
அறிக்கை விடுகிறது சீனா,


அமெரிக்காவிடம் முறைஇடுவேன்
காஷ்மீர் என் பகுதி  பாக்.


கச்சதீவு மட்டும்மல்ல
இந்திய பெருங்கடலே எனக்குதான்
இது இலங்கை,


எதற்காக இந்த தீபாவளி

யாரை  அழித்ததிற்க்கு
இன்று தீபாவளி...!!!


இளைஞனே
என்று அமைதி வருகிறதோ
அன்று நமக்கு தீபாவளி.


- Maran
« Last Edit: October 28, 2013, 11:06:42 AM by Maran »

Offline Thavi

  • Sr. Member
  • *
  • Posts: 383
  • Total likes: 24
  • Total likes: 24
  • Karma: +0/-0
  • உயிர் பிரிந்தாலும் உன்னை பிரியாத வரம் வேண்டும்
தீயவனின் பிடியில் சிக்கி
இருள் அடைந்த மக்களின் வாழ்கையை!
பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் 
ஒளிமயமாய் மாற்றி பகைவனின்
விருப்பத்திற்கு இணங்க கொண்டாப்படும்
நாள் தீபாவளி !

வெற்றி வீரனாய் வீடு சென்றதும்
இனிப்பு கொடுத்து உபசரித்த
மகிழ்ச்சியில் தான் மட்டும் அல்லாமல்
தன் உலகத்தையே சந்தோஷத்தில்
உறையவைத்த நாள் இந்த நாள் !

ஒளிமயமான வாழ்க்கை தொங்கிய நாளை
ஒவ்வொரு வீட்டிலும் புத்தாடை உடுத்தி
புது புது வர்ணங்கள் பூசி
புன்னகையுடன் ஒருவர்க்கொருவர்
இனிப்பு பண்டங்களை பாசத்தோடு
பரிமாறிகொல்லும் நாள்
இந்த இன்னிய நாள் !

உள்ளம் அடைந்த சந்தோசத்தினை
உலகத்திற்கு தெரியவைக்கவே
பல வகையான பட்டாசுகளை
வெடித்து மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கும்
நாள் இன்றைய நாள் !

அனைவர்க்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள் !
நான் நேசிக்கும் நண்பர்கள் என்னை மறந்தாலும் என்னை நேசித்த நண்பர்களை நான் மறப்பதில்லை..

Offline முருகன்

தீபம் இருளை விளக்கி
ஒளியை தரும் தன்னால் ஆனவரை
தீபங்களின் வரிசை நம் இல்லங்களை,நிறைத்து
அகம் புறம் எல்லா இருளையும் நீக்கி
அனைவருக்கும் உற்சாகம் ஊக்கம் மகிழ்வு தந்து
இன்று போல் இவ்வருடம் முழுதும் நல்ல வளங்களை நிறைத்து
தீப ஒளிரட்டும் நம் இல்லங்களை நிரப்பட்டும்,மங்கலம் பெருகட்டும்
ஒளிமிக்க புது வசந்த வாழ்வை அளிக்க இறைவனை வணங்கி வாழ்த்துவோம்.


நண்பர்கள் அனைவர்க்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்!


Offline micro diary

காதல் தீபாவளி


நீ மத்தாப்பு வெடிக்கும்
கம்பிரத்தில் என் இதயம்
சிதறி போனதை  நீ அறிவாயா ?

உன்னை  நான்  கடந்து
செல்லுகையில்   உன்  காந்த  கண்களில்
இருக்கிறது  ஒளி  வீசும்  தீபாவளி

உன்னை  பார்த்த  நாள்  முதலாய்
என்  நினைவுகள்  உனையே  சுற்றும்
சங்கு  சக்கரமாய்  மாறி போனது

நீ  உன்  அழுத்தமான
இதழ்களால்  புன்னகை  உதிர்க்கும்  போது
என்னுள்  ஆயிரம்   சரவெடிகளை கொளுத்தியது போல்   
தடு   மாறி போகிறது   என்  இதயம்

அசுரனை  அழித்ததால்  தீபாவளி  ஆம்
என்னை  அழித்து   நான்  நீயாக  மாறி  போனதால்
என் காதலுக்கும்  தீபாவளி  தான் .....

Arul

  • Guest
தீபாவளி

தீப ஒளி கொடுக்கும் தீபாவளி திருநாளாம்
இது பல மனங்களுக்கு கொடுக்கும் மரண வலிநாளாம்
அரக்கன் இறந்ததை மகிழ்வுக்கு கொண்டாடும் நாள்
இங்கு பல மனங்களை அரக்கனாக மாற்றும் திருநாள்

வசதி படைத்தவனுக்கு தீபாவளி
ஏழ்மைக்கு இந்நாள் தீராவலி
பல உறவுகளை அழிக்கும் வல்லமை
கொண்ட திருநாளாம் இந்நாள்..........

இனிப்புகள் வழங்கி புத்தாடை அணிந்து
பட்டாசுகள் முழங்கி தன் ஆடம்பரத்தை
பரை சாற்றும் ஒரு நாள்

தினமும் கஞ்சி குடித்து
கந்தல் ஆடை அணிந்து
வெடிக்கின்ற பட்டாசுகளை
வேடிக்கை பார்க்கும் எங்களை
போன்ற ஏழைகளுக்கு

இப்புவியை விட்டு செல்லும் நாளே
மகத்தான திருநாள்............................

Offline Gayathri

!! Happy Deepawali !!



தீபங்கள் ஜொலிக்க,
பட்டாசு வெடிக்க,
புதுதுணி உடுத்தி,
உங்கள் வாழ்க்கையில்,
துன்பங்கள் எல்லாம் கரைந்து போக,
ஒளிமயமான எதிர்காலம் பிறக்க,
நினைத்ததை எல்லாம் சாதிக்க,
இந்த தீபாவளி திருநாளில்,
மகிழ்ச்சியுடன் நீங்கள் கொண்டாட,
என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் ...


!! Happy Deepawali !!
« Last Edit: October 30, 2013, 07:26:54 PM by Gayathri »

Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
அசுரனை அழித்துவிட்டதற்காய்
அனைவரும் ஆனந்த களிகூத்தாடும்
அந்நாளே தீபஒளி  திருநாள்......!!

ஆடம்பரமாய் அற்ப சுகத்திற்கு
ஆயிரமாயிரமாய் செலவு செய்யாமல்
ஆத்மார்த்தமாய் தீபம் ஏற்றி வழிபடுவோம்..!

இல்லாதோர் வாழ்வில்
இருளெனும் அரக்கனை விளக்கி
இன்பம் பொங்கிட
இயன்றளவு உதவிடுவோம்....!

அதிகாலை எழுந்து
அன்னையரின் கையால்
எண்ணெய் குளியலிட்டு
புத்தாடை அணிந்து
அண்டை அயலாருக்கு பாதிப்புமிகாமல்
அதிகஒலி உள்ள வெடிகளை வெடித்து
இயற்கைக்கு பங்கம் விளைவிக்காமல்
ஒளி தரும் தீபமேற்றி
சப்தமில்லா மத்தாப்பை கொளுத்தி
ஆனந்த கூச்சலிட்டு
இனிப்புண்டு  இன்பமயமாய்
உற்றார் உறவினரோடு கொண்டாட
அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள் ...!!

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்