Author Topic: ~ 30 வகை இடியாப்பம் ~  (Read 2485 times)

Online MysteRy

Re: ~ 30 வகை இடியாப்பம் ~
« Reply #15 on: October 20, 2013, 05:54:25 PM »
தேங்காய்ப்பால் இடியாப்பம்



தேவையானவை:
இட்லி அரிசி - 250 கிராம், தேங்காய்ப்பால் - 100 மில்லி, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, பொடித்த வெல்லம் - ஒரு கப், நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை:
இடியாப்பத்தை பக்கம் 104-ல் இருக்கும் இனிப்பு இடியாப்பத்தில் சொல்லப்பட்டிருப்பது போல தயாரித்துக்  கொள்ளவும்.
தேங்காய்ப்பாலுடன் வெல்லம் சேர்த்து லேசாக சூடாக்கி, ஏலக்காய்த்துள் சேர்க்கவும். இதை இடியாப்பத்துடன் கலக்கவும்.

Online MysteRy

Re: ~ 30 வகை இடியாப்பம் ~
« Reply #16 on: October 20, 2013, 05:55:35 PM »
ஃப்ரெஷ் ஃப்ரூட்ஸ் இடியாப்பம்



தேவையானவை:
இட்லி அரிசி - 250 கிராம், வாழைப்பழம் - ஒன்று, திராட்சை - 10, மாதுளை முத்துக்கள் - சிறிதளவு, பொடியாக நறுக்கிய ஆப்பிள் - சிறிதளவு, நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை:
இடியாப்பத்தை பக்கம் 104-ல் இருக்கும் இனிப்பு இடியாப்பத்தில் சொல்லப்பட்டிருப்பது போல தயாரித்துக்  கொள்ளவும்.
பொடியாக நறுக்கிய வாழைப்பழம், மாதுளை முத்துக்கள், திராட்சை, நறுக்கிய ஆப்பிள் ஆகியவற்றை இடியாப்பத்துடன் கலந்து பரிமாறவும்.

Online MysteRy

Re: ~ 30 வகை இடியாப்பம் ~
« Reply #17 on: October 20, 2013, 05:56:43 PM »
லெமன் இடியாப்பம்



தேவையானவை:
இட்லி அரிசி - 250 கிராம், எலுமிச்சம்பழம் - ஒன்று, பொட்டுக்கடலை - 2 டீஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - ஒன்று, நல்லெண்ணெய் - 3 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
 இடியாப்பத்தை பக்கம் 104-ல் இருக்கும் இனிப்பு இடியாப்பத்தில் சொல்லப்பட்டிருப்பது போல தயாரித்துக்  கொள்ளவும்.
வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு சேர்த்து, வெடித்ததும் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து, பொட்டுக் கடலை, பெருங்காயத்தூள் சேர்த்து, எலுமிச்சைச் சாறு, மஞ்சள்தூள் சேர்த்துக் கிளறி... இதை  இடியாப்பத்துடன் கலக்கவும்.
குறிப்பு: எலுமிச்சைச் சாறுக்குப் பதில் துருவிய மாங்காய் போட்டும் கலக்கலாம்.

Online MysteRy

Re: ~ 30 வகை இடியாப்பம் ~
« Reply #18 on: October 20, 2013, 05:57:50 PM »
மோர்க்குழம்பு இடியாப்பம்



தேவையானவை:
இட்லி அரிசி - 250 கிராம், புளிக்காத தயிர் - 500 மில்லி, தனியா, கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, அரிசி - தலா ஒரு டீஸ்பூன், வெந்தயம் - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - இரண்டு, நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன், தேங்காய் துருவல் - ஒரு சிறிய கப், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
இடியாப்பத்தை பக்கம் 104-ல் இருக்கும் இனிப்பு இடியாப்பத்தில் சொல்லப்பட்டிருப்பது போல தயாரித்துக்  கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு தனியா, காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு, வெந்தயம், துவரம்பருப்பு, அரிசி ஆகியவற்றை வறுத்து, தேங்காய் துருவல் சேர்த்து நைஸாக மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். தயிரைக் கடைந்து, அரைத்ததை சேர்த்து, உப்பு சேர்த்து லேசாக சூடுபடுத்தவும் (கொதிக்க வைக்கக் கூடாது). இந்த மோர்க்குழம்புடன் இடியாப்பத்தை சேர்த்துக் கலக்கி, பரிமாறவும்.
குறிப்பு: வெண்டைக்காயை நறுக்கி, எண்ணெய் விட்டு வதக்கி, குழம்புடன் சேர்க்கலாம்.

Online MysteRy

Re: ~ 30 வகை இடியாப்பம் ~
« Reply #19 on: October 20, 2013, 05:59:02 PM »
லஸ்ஸி இடியாப்பம்



தேவையானவை:
இட்லி அரிசி - 250 கிராம், புளிக்காத தயிர் - 250 மில்லி, சர்க்கரை - 6 டீஸ்பூன், நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை:
இடியாப்பத்தை பக்கம் 104-ல் இருக்கும் இனிப்பு இடியாப்பத்தில் சொல்லப்பட்டிருப்பது போல தயாரித்துக்  கொள்ளவும்.
சாப்பிடுவதற்கு சற்று முன்பு தயிர், சர்க்கரையை சேர்த்து, இடியாப்பத்துடன் கலக்கி பரிமாறவும்.

Online MysteRy

Re: ~ 30 வகை இடியாப்பம் ~
« Reply #20 on: October 20, 2013, 06:00:11 PM »
ஸ்ட்ராபெர்ரி இடியாப்பம்



தேவையானவை:
 இட்லி அரிசி - 250 கிராம், ஸ்ட்ராபெர்ரி - 10, இஞ்சி - ஒரு சிறு துண்டு, நெய் - 4 டீஸ்பூன்,  பேரீச்சம்பழம் - ஒன்று, நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன், சர்க்கரை - 2 டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை:
இடியாப்பத்தை பக்கம் 104-ல் இருக்கும் இனிப்பு இடியாப்பத்தில் சொல்லப்பட்டிருப்பது போல தயாரித்துக்  கொள்ளவும்.
ஸ்ட்ராபெர்ரி, இஞ்சியை தோல் சீவி நறுக்கி போட்டு, பேரீச்சம்பழத்தை கொட்டை நீக்கி சேர்த்து, மிக்ஸியில் அரைக்கவும். வாணலியில் நெய் விட்டு அரைத்ததை போட்டு வதக்கி, சர்க்கரை சேர்த்து கிளறி, இடியாப்பத்துடன் கலக்கவும்.

Online MysteRy

Re: ~ 30 வகை இடியாப்பம் ~
« Reply #21 on: October 20, 2013, 06:01:21 PM »
மாம்பழ ஸ்குவாஷ் இடியாப்பம்



தேவையானவை:
 இட்லி அரிசி - 250 கிராம், மாம்பழம் - ஒன்று, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, சர்க்கரை - 4 டீஸ்பூன், நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை:
இடியாப்பத்தை பக்கம் 104-ல் இருக்கும் இனிப்பு இடியாப்பத்தில் சொல்லப்பட்டிருப்பது போல தயாரித்துக்  கொள்ளவும்.
மாம்பழத்தை தோல் சீவி நறுக்கி, மிக்ஸியில் அரைத்து, ஏலக்காய்த்தூள், சர்க்கரை சேர்த்துக் கலக்கவும். இதை இடியாப்பத்துடன் கலக்கி பரிமாறவும்.

Online MysteRy

Re: ~ 30 வகை இடியாப்பம் ~
« Reply #22 on: October 20, 2013, 06:02:30 PM »
பாஸந்தி இடியாப்பம்



தேவையானவை:
இட்லி அரிசி - 250 கிராம், பால் - ஒரு லிட்டர், சர்க்கரை - ஒரு கப், ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ - சிறிதளவு, நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை:
இடியாப்பத்தை பக்கம் 104-ல் இருக்கும் இனிப்பு இடியாப்பத்தில் சொல்லப்பட்டிருப்பது போல தயாரித்துக்  கொள்ளவும்.
பாலை சிறிது சிறிதாக ஆடை படியும்படி காய்ச்சி, ஆடைகளை எடுத்து வைத்து, பால் 250 மில்லி ஆக சுண்டக் காய்ந்ததும் பால் ஆடை, சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கவும். இடியாப்பத்துடன் பாஸந்தியை சேர்த்துக் கலக்கவும். மேலே குங்குமப்பூ தூவவும்.

Online MysteRy

Re: ~ 30 வகை இடியாப்பம் ~
« Reply #23 on: October 20, 2013, 06:03:41 PM »
வேர்க்கடலை இடியாப்பம்



தேவையானவை:
இட்லி அரிசி - 250 கிராம், வறுத்த வேர்க்கடலை - 200 கிராம், நெய் - 4 டீஸ்பூன், நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
இடியாப்பத்தை பக்கம் 104-ல் இருக்கும் இனிப்பு இடியாப்பத்தில் சொல்லப்பட்டிருப்பது போல தயாரித்துக்  கொள்ளவும்.
வறுத்த வேர்க்கடலையை லேசாக பொடித்து, கொஞ்சம் உப்பு சேர்த்து, இடியாப்பத்துடன் சேர்த்து, நெய் விட்டு கலக்கவும்.

Online MysteRy

Re: ~ 30 வகை இடியாப்பம் ~
« Reply #24 on: October 20, 2013, 06:04:52 PM »
மல்டி தானிய பொடி இடியாப்பம்



தேவையானவை:
இட்லி அரிசி - 250 கிராம், துவரம்பருப்பு, கொள்ளு - தலா 4 டீஸ்பூன், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா 2 டீஸ்பூன், மிளகு - 10, காய்ந்த மிளகாய் - ஒன்று, நெய் - 4 டீஸ்பூன், நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
இடியாப்பத்தை பக்கம் 104-ல் இருக்கும் இனிப்பு இடியாப்பத்தில் சொல்லப்பட்டிருப்பது போல தயாரித்துக்  கொள்ளவும்.
வெறும் வாணலியில் கொள்ளு, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், மிளகு ஆகியவற்றை வறுத்து மிக்ஸியில் பொடிக்கவும். இதனுடன் தேவையான உப்பு சேர்த்துக் கலந்து, இடியாப்பத்தின் மேல் தூவி நெய் விட்டுக் கலக்கவும்.

Online MysteRy

Re: ~ 30 வகை இடியாப்பம் ~
« Reply #25 on: October 20, 2013, 06:06:39 PM »
தேங்காய்ப்பால் சொதி இடியாப்பம்



தேவையானவை:
தேங்காய்ப்பால் - 100 மில்லி, இட்லி அரிசி - 250 கிராம், நீளவாக்கில் நறுக்கிய பீன்ஸ் - 10 துண்டுகள், நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிய கேரட் - 10 துண்டுகள், நீளவாக்கில் நறுக்கிய குடமிளகாய்  - சிறிதளவு, நெய், நல்லெண்ணெய் - தலா ஒரு டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

தாளிக்க:
எண்ணெய், கடுகு, வெந்தயம், உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன்.

செய்முறை:
இடியாப்பத்தை பக்கம் 104-ல் இருக்கும் இனிப்பு இடியாப்பத்தில் சொல்லப்பட்டிருப் பது போல தயாரித்துக் கொள்ளவும்.
பீன்ஸ், கேரட், குடமிளகாயை நெய் விட்டு வதக்கி, உப்பு சேர்த்து, வெந்ததும் தேங்காய்ப்பால் சேர்க்கவும். எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம் தாளித்து சேர்க்கவும். ஒரு கொதி வந்தததும் கொத்தமல்லி தூவி இறக்கவும். சாப்பிடும் நேரத்தில் இதை இடியாப்பத்துடன் கலந்து கொடுக்கவும்.

Online MysteRy

Re: ~ 30 வகை இடியாப்பம் ~
« Reply #26 on: October 20, 2013, 06:08:02 PM »
கத்திரிக்காய் இடியாப்பம்



தேவையானவை:
இட்லி அரிசி - 250 கிராம், கத்திரிக்காய் - நான்கு (நறுக்கிக் கொள்ளவும்)  பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் - தலா ஒன்று, நெய் - 4 டீஸ்பூன், நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
வறுத்துப் பொடிக்க: கடலைப்பருப்பு, தனியா - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, எண்ணெய் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை:
இடியாப்பத்தை பக்கம் 104-ல் இருக்கும் இனிப்பு இடியாப்பத்தில் சொல்லப்பட்டிருப்பது போல தயாரித்துக்  கொள்ளவும்.
வாணலியில் நெய் விட்டு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம் தாளித்து... நறுக்கிய கத்திரிக்காயைப் போட்டு, உப்பு சேர்த்து வதக்கவும். வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு... கடலைப்பருப்பு, தனியா, காய்ந்த மிளகாயை வறுத்து மிக்ஸியில் பொடிக்கவும். வதக்கிய கத்திரிக்காய் கலவையை இடியாப் பத்துடன் சேர்த்து, பொடியையும் தூவி நன்றாகக் கலக்கவும்.

Online MysteRy

Re: ~ 30 வகை இடியாப்பம் ~
« Reply #27 on: October 20, 2013, 06:09:14 PM »
மாங்காய் இடியாப்பம்



தேவையானவை:
இட்லி அரிசி - 250 கிராம், மாங்காய் - ஒன்று, பொடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - ஒன்று, கடுகு - ஒரு டீஸ்பூன், நெய் - 4 டீஸ்பூன், நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன்,  உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
இடியாப்பத்தை பக்கம் 104-ல் இருக்கும் இனிப்பு இடியாப்பத்தில் சொல்லப்பட்டிருப்பது போல தயாரித்துக்  கொள்ளவும்.
மாங்காயை, கேரட் துருவலில் துருவிக் கொள்ளவும். வாணலியில் நெய் விட்டு கடுகு போட்டு, வெடித்ததும் நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் போட்டு வதக்கி, மாங்காய் துருவலை சேர்த்து, தேவையான உப்பு போட்டு, நன்றாக வதக்கி... இடியாப்பத்துடன் சேர்த்துக் கிளறவும்.

Online MysteRy

Re: ~ 30 வகை இடியாப்பம் ~
« Reply #28 on: October 20, 2013, 06:10:48 PM »
உளுந்து இடியாப்பம்



தேவையானவை:
இட்லி அரிசி - 250 கிராம், உளுத்தம்பருப்பு - 100 கிராம், பச்சை மிளகாய் - ஒன்று, கடுகு - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை - சிறிதளவு, நெய் - 4 டீஸ்பூன், நல்லெண்ணெய் - 3 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
இடியாப்பத்தை பக்கம் 104-ல் இருக்கும் இனிப்பு இடியாப்பத்தில் சொல்லப்பட்டிருப்பது போல தயாரித்துக்  கொள்ளவும்.
உளுத்தம்பருப்பை ஊற வைத்து, களைந்து, வடிகட்டி, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து கெட்டியாக அரைக்கவும். இட்லித் தட்டில் சிறிதளவு எண்ணெய் தடவி, அரைத்த உளுத்தம்பருப்பை வேகவிட்டு எடுக்கவும். அதை ஒரு தட்டில் போட்டு உதிர்த்துக் கொள்ளவும். வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து, பெருங்காயத்தூள் சேர்த்து, உதிர்த்த உளுந்தை சேர்த்துக் கிளறவும். இதை இடியாப்பத்துடன் சேர்த்து, நெய் விட்டு நன்றாகக் கலக்கவும்.

Online MysteRy

Re: ~ 30 வகை இடியாப்பம் ~
« Reply #29 on: October 20, 2013, 06:12:14 PM »
கீரை இடியாப்பம்



தேவையானவை:
இட்லி அரிசி - 250 கிராம், பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள், பொடியாக நறுக்கிய வெந்தயக்கீரை - தலா ஒரு கப், நறுக்கிய புதினா, முள்ளங்கி இலை - தலா ஒரு கைப்பிடி அளவு, நெய் - 4 டீஸ்பூன், நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
இடியாப்பத்தை பக்கம் 104-ல் இருக்கும் இனிப்பு இடியாப்பத்தில் சொல்லப்பட்டிருப்பது போல தயாரித்துக்  கொள்ளவும்.
வாணலியில் நெய் விட்டு, பொடியாக நறுக்கிய பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள், வெந்தயக்கீரை  புதினா, முள்ளங்கி இலைகளை சேர்த்து, உப்பு போட்டு வதக்கி இடியாப்பத்துடன் கலக்கவும்.
குறிப்பு: முருங்கைக்கீரை, வல்லாரைக்கீரை, சிறுகீரை, பொன்னாங்கண்ணிகீரை என எந்த கீரையிலும் இதே முறையில் தயாரிக்கலாம்.