Author Topic: ~ 30 வகை இடியாப்பம் ~  (Read 2493 times)

Offline MysteRy

~ 30 வகை இடியாப்பம் ~
« on: October 20, 2013, 05:36:37 PM »
இனிப்பு இடியாப்பம்



தேவையானவை:
வெல்லம், இட்லி அரிசி - தலா 200 கிராம், தேங்காய் துருவல் - ஒரு கப், நல்லெண்ணெய் ­- ஒரு டீஸ்பூன்,  ஏலக்காய்த்தூள், உப்பு - சிறிதளவு.

இடியாப்பம் செய்முறை:
இட்லி அரிசியை 2 மணி நேரம் ஊற வைத்து, மிக்ஸியில் நைஸாக அரைத்து, சிறிது உப்பு சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைக்கவும். வாணலியில் நல்லெண்ணெயை விட்டு, கரைத்து வைத்து இருக்கும் மாவை ஊற்றி, கெட்டியாகக் கிளறவும் (அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்). மாவு வெந்ததும் நன்கு பிசையவும். மாவை சிறிய பந்து அளவு உருண்டைகளாக உருட்டவும். அகலமான ஒரு பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்க வைத்து, உருண்டைகளைப் போடவும் (உருண்டைகள் மூழ்கும் அளவு தண்ணீர் விடவும்). உருண்டைகள் வெந்ததும் எடுத்து, இடியாப்ப அச்சில் போட்டு பிழிந்து கொள்ளவும் (உருண்டைகளை சரிபாதியாக 'கட்’ செய்து பார்த்தால், மாவு வெள்ளையாக தெரியக்கூடாது. அதுதான் சரியான பதம். மாவு தெரிந்தால் மேலும் சிறிது நேரம் வேகவிட வேண்டும்).

செய்முறை:
வெல்லத்தைக் கரைத்து கொதிக்கவிட்டு, வடிகட்டி, பாகு காய்ச்சவும். பாகை தண்ணீரில் விட்டு பார்த்தால் உருட்ட வரவேண்டும் இதுதான் சரியான பதம். பாகு ஆறியதும் இடியாப்பத்தை அதில் சேர்த்து... ஏலக்காய்த்தூள், தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறி பரிமாறவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை இடியாப்பம் ~
« Reply #1 on: October 20, 2013, 05:38:05 PM »
புளியோதரை இடியாப்பம்



தேவையானவை:
இட்லி அரிசி - 250 கிராம், காய்ந்த மிளகாய் - 7, புளி - 50 கிரம், வறுத்த வேர்க்கடலை - 25 கிராம், தனியா - 2 டீஸ்பூன், கடலைப்பருப்பு, வெந்தயம் - தலா ஒரு டீஸ்பூன், விரலி மஞ்சள் - ஒன்று (உடைத்துக் கொள்ளவும்), பொடித்த வெல்லம் - சிறிதளவு, பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், கறி வேப்பிலை - சிறிதளவு, நல்லெண்ணெய் (புளிக்காய்ச்சலுக்கு) - 100 மில்லி, உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
இடியாப்பத்தை, பக்கம் 104-ல் இருக்கும் இனிப்பு இடியாப்பத்தில் சொல்லப்பட்டிருப்பது போல தயாரித்துக்  கொள்ளவும்.
வெறும் வாணலியில் வெந்தயம், 2 காய்ந்த மிளகாய், தனியா, மஞ்சள் ஆகியவற்றை வறுத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். கடாயில் எண் ணெய் விட்டு, கடுகு தாளித்து, 5 காய்ந்த மிளகாயை கிள்ளிப் போட்டு, கடலைப்பருப்பு, வறுத்த வேர்க்கடலை சேர்த்து, கறிவேப்பிலையை கிள்ளிப் போட்டு, பெருங்காயத்தூள் சேர்த்துக் கிளறவும். புளியை தேவையான தண்ணீர்விட்டு கரைத்து சேர்த்து, உப்பு சேர்த்து, கொதிக்கவிடவும். வறுத்து அரைத்து வைத்திருக் கும் பொடியை இதனுடன் சேர்த்து, வெல்லம் சேர்த்து கெட்டியானவுடன் இறக்கினால்.. புளிக்காய்ச்சல் தயார்.
இடியாப்பத்துடன் புளிக்காய்ச்சல் சேர்த்துக் கலக்கவும்.
குறிப்பு: கடைகளில் கிடைக்கும் புளியோதரை மிக்ஸ், புளியோதரைப் பொடி சேர்த்தும் செய்யலாம்.

Offline MysteRy

Re: ~ 30 வகை இடியாப்பம் ~
« Reply #2 on: October 20, 2013, 05:39:14 PM »
புதேங்காய் துருவல் இடியாப்பம்



தேவையானவை:
இட்லி அரிசி - 250 கிராம், தேங்காய் துருவல் - ஒரு கப், உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன் (10 நிமிடம் ஊற வைத்து வடிகட்டவும்), பெருங்காயத்தூள் - சிறிதளவு, தேங்காய் எண்ணெய் - 4 டீஸ்பூன், வறுத்த வேர்க்கடலை, கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
தாளிக்க: காய்ந்த மிளகாய் - ஒன்று, கடுகு - ஒரு டீஸ்பூன், நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை:
 இடியாப்பத்தை பக்கம் 104-ல் இருக்கும் இனிப்பு இடியாப்பத்தில் சொல்லப்பட்டிருப்பது போல தயாரித்துக்  கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, காய்ந்த மிளகாய் தாளித்து, உளுத்தம்பருப்பு, தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக வறுக்கவும். இதனுடன் பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து, இடியாப்பத்துடன் கலந்து, வறுத்த வேர்க்கடலை, கறிவேப்பிலை சேர்க்கவும்.
குறிப்பு: முந்திரி, பொட்டுக்கடலை சேர்த்தும் இதை தயாரிக்கலாம்.

Offline MysteRy

Re: ~ 30 வகை இடியாப்பம் ~
« Reply #3 on: October 20, 2013, 05:40:26 PM »
வெஜிடபிள் இடியாப்பம்



தேவையானவை:
இட்லி அரிசி - 200 கிராம், கேரட் துருவல், வெங்காயத்தாள்  (பொடியாக நறுக்கியது), கோஸ் துருவல் - தலா ஒரு கப், பச்சை மிளகாய்  - ஒன்று (பொடியாக நறுக்கவும்), நெய் - 4 டீஸ்பூன், நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
இடியாப்பத்தை பக்கம் 104-ல் இருக்கும் இனிப்பு இடியாப்பத்தில் சொல்லப்பட்டிருப்பது போல தயாரித்துக்  கொள்ளவும்.
வாணலியில் நெய் விட்டு, கேரட் துருவல், நறுக்கிய ஸ்பிரிங் ஆனியன், கோஸ் துருவல், பச்சை மிளகாய் சேர்த்து... சிறிது உப்பு சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும். பிழிந்து வைத்திருக்கும் இடியாப் பத்துடன் வதக்கிய காய்கறி சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை இடியாப்பம் ~
« Reply #4 on: October 20, 2013, 05:41:40 PM »
தக்காளி இடியாப்பம்



தேவையானவை:
இட்லி அரிசி, தக்காளி - தலா 200 கிராம்,  இஞ்சி பேஸ்ட் - ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், பூண்டு பேஸ்ட் - ஒரு டீஸ்பூன், நல்லெண்ணெய் - 3 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
இடியாப்பத்தை பக்கம் 104-ல் இருக்கும் இனிப்பு இடியாப்பத்தில் சொல்லப்பட்டிருப்பது போல தயாரித்துக்  கொள்ளவும்.
வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய தக்காளி, இஞ்சி பேஸ்ட், பூண்டு பேஸ்ட், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து, நன்கு வதக்கவும். பிறகு, இதை இடியாப்பத்துடன் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை இடியாப்பம் ~
« Reply #5 on: October 20, 2013, 05:43:04 PM »
மிளகு  சீரக இடியாப்பம்



தேவையானவை:
இட்லி அரிசி - 200 கிராம், மிளகுத்தூள், சீரகத்தூள் - தலா ஒரு டீஸ்பூன், நெய் - 4 டீஸ்பூன், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை (பொடியாக நறுக்கவும்) - சிறிதளவு, நல்லெண்ணெய் ­- ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. 

செய்முறை:
இடியாப்பத்தை பக்கம் 104-ல் இருக்கும் இனிப்பு இடியாப்பத்தில் சொல்லப்பட்டிருப்பது போல தயாரித்துக்  கொள்ளவும்.
வாணலியில் நெய் விட்டு... மிளகுத்தூள், சீரகத்தூள், பெருங்காயத்தூளை வறுத்து, இடியாப்பத்துடன் சேர்த்து நன்கு கலக்கவும். நறுக்கிய கறிவேப்பிலையை மேலே தூவவும்.
குறிப்பு: மசாலா வாசனை விருப்பம் உடையவர்கள், கரம் மசாலாத்தூள் தூவியும் கலக்கலாம்.

Offline MysteRy

Re: ~ 30 வகை இடியாப்பம் ~
« Reply #6 on: October 20, 2013, 05:44:11 PM »
முந்திரி  சர்க்கரை இடியாப்பம்



தேவையானவை:
இட்லி அரிசி - 250 கிராம், முந்திரிப்பருப்பு - 20, சர்க்கரை - ஒரு கப், நெய், நல்லெண்ணெய் - தலா ஒரு டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, உப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை:
இடியாப்பத்தை பக்கம் 104-ல் இருக்கும் இனிப்பு இடியாப்பத்தில் சொல்லப்பட்டிருப்பது போல தயாரித்துக்  கொள்ளவும்.
பொடித்த முந்திரிப்பருப்பு, பொடித்த சர்க்கரையை இடியாப்பத்துடன் சேர்த்துக் கலந்து, ஒரு டீஸ்பூன் நெய் விட்டு, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கவும்.
குறிப்பு: வளரும் குழந்தைகளுக்கு இந்த இடியாப்பம் மிகவும் நல்லது. பாதாம், பிஸ்தா பொடித்தும் சேர்க்கலாம்.

Offline MysteRy

Re: ~ 30 வகை இடியாப்பம் ~
« Reply #7 on: October 20, 2013, 05:45:17 PM »
ஜீரண இடியாப்பம்



தேவையானவை:
இட்லி அரிசி - 200 கிராம், இஞ்சி பேஸ்ட், பூண்டு பேஸ்ட் - தலா ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள், சீரகத்தூள் - தலா அரை டீஸ்பூன், நெய் - 4 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, நல்லெண்ணெய் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
இடியாப்பத்தை பக்கம் 104-ல் இருக்கும் இனிப்பு இடியாப்பத்தில் சொல்லப்பட்டிருப்பது போல தயாரித்துக்  கொள்ளவும்.
வாணலியில் நெய் விட்டு இஞ்சி பேஸ்ட், பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கி... மிளகுத்தூள், சீரகத்தூள், பெருங்காயத்தூள் போட்டு, இடியாப்பத்தை சேர்த்து நன்கு கலக்கி, பரிமாறவும்.
குறிப்பு: நறுக்கிய கொத்தமல்லி, புதினா தூவி கலந்து சாப்பிடலாம்.

Offline MysteRy

Re: ~ 30 வகை இடியாப்பம் ~
« Reply #8 on: October 20, 2013, 05:46:23 PM »
புதினா இடியாப்பம்



தேவையானவை:
இட்லி அரிசி - 250 கிராம், புதினா இலை - ஒரு கைப்பிடி அளவு, பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒரு கப், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - சிறிதளவு, கடுகு, பொட்டுக்கடலை - தலா ஒரு டீஸ்பூன், நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன், நெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
இடியாப்பத்தை பக்கம் 104-ல் இருக்கும் இனிப்பு இடியாப்பத்தில் சொல்லப்பட்டிருப்பது போல தயாரித்துக்  கொள்ளவும்.
வாணலியில் கொஞ்சம் நெய் விட்டு சூடானதும், கடுகு சேர்த்து, வெடித்ததும் வெங்காயம், பச்சை மிளகாய், பொட்டுக்கடலை தாளித்து... பொடியாக நறுக்கிய புதினா இலை சேர்த்து வதக்கவும். இடியாப்பத்துடன் சிறிது நெய் சேர்த்து, வதக்கியதையும் சேர்த்து, தேவையான உப்பு சேர்த்து கலக்கவும்.
குறிப்பு: சிறிதளவு வேர்க்கடலை, முந்திரி வறுத்து சேர்க்கலாம்.

Offline MysteRy

Re: ~ 30 வகை இடியாப்பம் ~
« Reply #9 on: October 20, 2013, 05:47:33 PM »
டிரைஃப்ரூட் இடியாப்பம்



தேவையானவை:
இட்லி அரிசி - 250 கிராம், பாதாம் பருப்பு - 4, முந்திரிப்பருப்பு - 10, பேரீச்சம்பழம் - 4, பிஸ்தாபருப்பு, உலர்ந்த திராட்சை - தலா 10, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, நெய் - 4 டீஸ்பூன், நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை:
இடியாப்பத்தை பக்கம் 104-ல் இருக்கும் இனிப்பு இடியாப்பத்தில் சொல்லப்பட்டிருப்பது போல தயாரித்துக்  கொள்ளவும்.
பாதாமை உடைத்து இடியாப்பத்துடன் சேர்த்து, முந்திரி, பிஸ்தாவை நெய்யில் வறுத்துப் போட்டு,  பேரீச்சம்பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கி போட்டு, ஏலக்காய்த்தூள், உலர்ந்த திராட்சை சேர்த்து, சிறிது நெய் விட்டு கலக்கவும்.
குறிப்பு: ட்ரைஃப்ரூட்ஸை அரைத்தும் கலக்கலாம். பொடித்து சேர்த்தும் கலக்கலாம்.

Offline MysteRy

Re: ~ 30 வகை இடியாப்பம் ~
« Reply #10 on: October 20, 2013, 05:48:47 PM »
காப்ஸிகம்  ஆனியன் இடியாப்பம்



தேவையானவை:
இட்லி அரிசி - 250 கிராம், குடமிளகாய், பெரிய வெங்காயம் - தலா ஒன்று, நெய் - 4 டீஸ்பூன், நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
இடியாப்பத்தை பக்கம் 104-ல் இருக்கும் இனிப்பு இடியாப்பத்தில் சொல்லப்பட்டிருப்பது போல தயாரித்துக்  கொள்ளவும்.
வாணலியில் நெய் விட்டு பொடியாக நறுக்கிய குடமிளகாய், வெங்காயம் சேர்த்து, உப்பு சேர்த்து வதக்கி, இடியாப்பத்துடன் கலக்கவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை இடியாப்பம் ~
« Reply #11 on: October 20, 2013, 05:49:52 PM »
பைனாப்பிள் இடியாப்பம்



தேவையானவை:
இட்லி அரிசி - 250 கிராம், பைனாப்பிள் - 10 ஸ்லைஸ், நெய்யில் வறுத்த முந்திரி - 10, நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை:
இடியாப்பத்தை பக்கம் 104-ல் இருக்கும் இனிப்பு இடியாப்பத்தில் சொல்லப்பட்டிருப்பது போல தயாரித்துக்  கொள்ளவும்.
பைனாப்பிளை தோல் சீவி நறுக்கி, அரைத்து, இடியாப்பத்துடன் கலக்கவும். வறுத்த முந்திரி சேர்க்கவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை இடியாப்பம் ~
« Reply #12 on: October 20, 2013, 05:50:58 PM »
உருளை மசாலா இடியாப்பம்



தேவையானவை:
இட்லி அரிசி - 250 கிராம், உருளைக்கிழங்கு - இரண்டு, கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன், நல்லெண்ணெய் - 5 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒரு கப், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
இடியாப்பத்தை பக்கம் 104-ல் இருக்கும் இனிப்பு இடியாப்பத்தில் சொல்லப்பட்டிருப்பது போல தயாரித்துக்  கொள்ளவும்.
உருளைக்கிழங்கை பொடி யாக நறுக்கவும். வாணலியில் 4 டீஸ்பூன் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கி, உருளைக் கிழங்கை சேர்த்து உப்பு, மிள காய்த்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கிளறி இறக்கவும். இடியாப்பத்துடன் உருளை மசாலாவை சேர்த்து நன்கு கலக்கவும்.
குறிப்பு:இடியாப்பம் செய் யும்போது... மாவு உருண்டை களை எடுத்த பிறகு, பாத்திரத் தில் இருக்கும் மாவு கலந்த நீருடன் உப்பு, மோர், நறுக்கிய சின்ன வெங்காயம் சிறிதளவு சேர்த்தால்... வெயிலுக்கு பதமான கஞ்சி தயார்.

Offline MysteRy

Re: ~ 30 வகை இடியாப்பம் ~
« Reply #13 on: October 20, 2013, 05:52:03 PM »
எள்ளுப்பொடி இடியாப்பம்



தேவையானவை:
இட்லி அரிசி - 250 கிராம், எள் - 100 கிராம், காய்ந்த மிளகாய் - 2, உளுத்தம்பருப்பு - 4 டீஸ்பூன், நெய் - 4 டீஸ்பூன், நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
இடியாப்பத்தை பக்கம் 104-ல் இருக்கும் இனிப்பு இடியாப்பத்தில் சொல்லப்பட்டிருப்பது போல தயாரித்துக்  கொள்ளவும்.
வெறும் வாணலியில் உளுத்தம்பருப்பு, எள், காய்ந்த மிளகாயை வறுத்துப் பொடிக்கவும். இடியாப்பத்துடன் நெய் விட்டு, பொடியை சேர்த்துக் கலக்கவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை இடியாப்பம் ~
« Reply #14 on: October 20, 2013, 05:53:12 PM »
பருப்பு உசிலி இடியாப்பம்



தேவையானவை:
இட்லி அரிசி - 250 கிராம், துவரம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு கப், காய்ந்த மிளகாய் - 2, நல்லெண்ணெய் (பருப்பு உசிலிக்கு) - 100 மில்லி, உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
இடியாப்பத்தை பக்கம் 104-ல் இருக்கும் இனிப்பு இடியாப்பத்தில் சொல்லப்பட்டிருப்பது போல தயாரித்துக்  கொள்ளவும்.
துவரம்பருப்பு, கடலைப்பருப்பை ஊற வைத்து தண்ணீர் வடிக்கட்டி, காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து கெட்டியாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு பருப்பு விழுது சேர்த்து, உதிரி உதிரியாக வருமாறு மிதமான தீயில் வைத்துக் கிளறி, இடியாப்பத்துடன் கலக்கவும்.
குறிப்பு: கொள்ளு சேர்த்தும் தயாரிக்கலாம்.