தேவையான பொருட்கள் :
ரவை- 2 கோப்பை
வெங்காயம்- 1
தக்காளி-1
பச்சைமிளகாய்-2
இஞ்சிபூண்டு விழுது-அரைத் தேக்கரண்டி
கேரட்,பீன்ஸ் தலா -அரைக் கோப்பை
பச்சைப்பட்டாணி -கால் கோப்பை
பூண்டு- ஆறு பற்கள்
கொத்தமல்லி- சிறிது
எண்ணெய்- கால் கோப்பை
உப்பு- தேவைக்கேற்ப
மஞ்சத்துள்- அரை தேக்கரண்டி
தாளிக்க:
கடுகு- அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை-ஒரு கொத்து
சோம்பு- அரை தேக்கரண்டி
பட்டை- 2 துண்டு
கிராம்பு- 2
பிரிஞ்சி இலை-2
காய்ந்தமிளகாய்-இரண்டு
செய்முறை :
வெங்காயம்,தக்காளி,பச்சைமிளகாய்,கேரட்,பீன்ஸ் ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைக்கவும்.
ரவையை இலேசாக வறுக்கவும்.
கடாயில் எண்ணெயை காயவைத்து தாளிப்பு சாமான்களைப் போட்டு வறுத்து வெங்காயத்தைப்
போட்டு வதக்கவும்.
பின்பு அதில் இஞ்சிபூண்டு விழுது,பச்சைமிளகாய் நறுக்கிய பூண்டு மற்றும் காய்கறிகளை போட்டு வதக்கவும்.
அதன் பிறகு தக்காளியைப் போட்டு நன்கு வதக்கவும்.
பின்பு மஞ்சத்தூள் உப்புத்தூளைப் போட்டு கலந்து ஐந்து கப் நீரை ஊற்றி கொதிக்க விடவும்.
பச்சை பட்டாணி புரோஜனாக இருந்தால் தண்ணீர் நன்கு கொதித்த பிறகு போடலாம்.
அதன் பின்பு ரவையைப் போட்டு அடிபிடிக்காமல் நன்கு கிளறவும்.
ரவை நன்கு வெந்ததும் கொத்தமல்லியைத் தூவி சூடாக பரிமாறவும்.
சுவையான ரவா கிச்சடி தயார்.