Author Topic: மிளகு மட்டன் கிரேவி  (Read 468 times)

Offline kanmani

மிளகு மட்டன் கிரேவி
« on: October 18, 2013, 11:44:13 AM »
 காரமான... மிளகு மட்டன் கிரேவி தேவையான பொருட்கள்:

 மட்டன் - 1 கிலோ மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன் கரம் மசாலா - 1 டேபிள் ஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது மஞ்சள் தூள் - 1 1/2 டேபிள் ஸ்பூன் இஞ்சி - 1 டேபிள் ஸ்பூன் (துருவியது) கடுகு - 1 டேபிள் ஸ்பூன் மிளகு தூள் - 2 டேபிள் ஸ்பூன் மல்லி தூள் - 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் மட்டனை நன்கு கழுவிக் கொண்டு, 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். 15 நிமிடம் ஆன பின்னர், குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், இஞ்சி பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள் மற்றும் உப்பு சேர்த்து கிளறி, பின் அதில் ஊற வைத்துள்ள மட்டனை சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 15 நிமிடம் அடுப்பில் வைத்து, மட்டனை வேக வைத்து இறக்க வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மீதமுள்ள எண்ணெய் ஊற்றி, கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, இஞ்சி, கரம் மசாலா மற்றும் மிளகு தூள் சேர்த்து கிளறி, குக்கரில் உள்ள வேக வைத்த மட்டனை சேர்த்து, தீயை குறைவில் வைத்து பச்சை வாசனை போகும் வரை கிளறி, இறக்கினால் காரமான மிளகு மட்டன் கிரேவி ரெடி!!! இதனை சாதம், சப்பாத்தி அல்லது தோசையுடன் சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.