தேவையான பொருட்கள்
முறுக்கு மாவு – 400 மில்லி
அரிசி மாவு – 1 /2 கிலோ
தேங்காய்ப்பால் – 150 மில்லி
நெய் – 3 தேக்கரண்டி
உப்பு – 3 தேக்கரண்டி
சர்க்கரை - 1 தேக்கரண்டி
தண்ணீர் – தேவைக்கு
செய்முறை
முறுக்கு மாவு தயாரிக்கும் முறை
உளுத்தம்பருப்பு – 125 மில்லி
பொட்டுக்கடலை – 150 மில்லி
பாசிப்பருப்பு – 125 மில்லி
எள் – 1 தேக்கரண்டி
சீரகம் – 2 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு, பாசிப்பருப்பு இரண்டையும் கழுவி காய வைத்துக் கொண்டு, வாணலியில் முதலில் பாசிப்பருப்பை மிதமான தீயில் வாசம் வரும்
வரை
வறுக்கவும்.
பின்னர் உளுத்தம்பருப்பை தனியாக மிதமான தீயில் வாசம் வரும் வரை வறுக்கவும். இதே போல் பொட்டுக்கடலையை லேசாக வறுத்துக் கொள்ளவும்.
சூடு ஆறிய பின்பு மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். பொடியாக்கிய மாவில் எள், சீரகம் இரண்டையும் சேர்த்துக் கலந்து ஆற வைத்துக் கொள்ளவும்.
இப்போது முறுக்கு மாவு தயார்.
முறுக்கு செய்முறை
தேங்காய்ப்பாலில் உப்பு, நெய், சர்க்கரை ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து கொள்ளவும்.
முறுக்கு மாவு, அரிசி மாவு இரண்டையும் ஒன்றாகக் கலந்து அதில் கலக்கி வைத்துள்ள தேங்காய்ப்பால், தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
கடாயில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடு செய்து கொள்ளவும்.
முறுக்கு உரலில் உள்ள ஸ்டார் அச்சில் மாவைப் போட்டு தனியாக ஒரு பாத்திரத்தில்அலுமினியம் சீட்டில் பிழிந்து வைத்துக் கொள்ளவும். அடுப்பை மிதமான சூட்டில் வைத்து, பின் முறுக்கை எடுத்து எண்ணெயில் சரித்து பொரித்தெடுக்கவும்.
குறிப்பு
தேங்காய்ப்பால் திக்காக இருக்க வேண்டும்.
முறுக்கு மாவைப் பிசைந்தவுடன் போட்டு விட வேண்டும். நீண்ட நேரம் பிசைந்து வைத்தால் முறுக்குப் பிழிவதற்கு சிரமமாக இருக்கும்.