சுவையான காலிஃப்ளவர்/ கோபி பராத்தா செய்வதற்கான எளிய செய்முறை குறிப்பு.
தேவையான பொருட்கள்
பராத்தாவுக்கு
கோதுமை மாவு – 2 கப்
உப்பு – 1 தேக்கரண்டி
தண்ணீர் – 1 கப் – 1 1/4 கப்
ஸ்டஃப் செய்ய
காலிஃப்ளவர் துருவியது (அ) பொடியாக நறுக்கியது – 2 கப்
வெங்காயம் பொடியாக நறுக்கியது – 1
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 2 (அ ) மசாலாத்தூள் – விருப்பத்திற்கேற்ப
சீரகம் – 1 தேக்கரண்டி
மஞ்சள்தூள் – 1 /2 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் – 1 /2 தேக்கரண்டி
எண்ணெய் / நெய் – பராத்தா சுடுவதற்கு
மல்லித்தழை பொடியாக நறுக்கியது – 2 மேசைக்கரண்டி
பராத்தா செய்முறை
கோதுமை மாவுடன் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். இதனுடன் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
மேலே ஈரத் துணியால் மூடி 20 நிமிடங்கள் அப்படியே வைக்கவும்.
ஸ்டஃப்பிங் செய்முறை
இரண்டு முறைகளில் ஸ்டஃப்பிங் செய்யலாம்.
முதல் முறையில் ஸ்டஃப் செய்ய கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் வேக வைக்காமல் ஒன்றாகக் கலந்து சப்பாத்தியின் உள்ளே ஸ்டஃப் செய்யவும்.
இரண்டாவது முறை
கடாயில் எண்ணெய் ஊற்றி சீரகம் சேர்த்து
வெடிக்க விடவும். பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வெங்காயம் நிறம் மாறும் வரை வதக்கவும்.
வெங்காயம் வதங்கியவுடன் மஞ்சள் தூள், மசாலா தூள், கரம் மசாலா தூள் சேர்த்து 30 வினாடிகள் வரை வதக்கவும்.
பின் துருவிய காலிபிளவர், உப்பு சேர்த்து அனைத்து மசாலா தூள்களும் நன்றாகக் கலக்குமாறு ஒரு நிமிடம் வரை வதக்கவும்.
அடுப்பை அணைத்து விட்டு, நறுக்கிய மல்லித்தழை சேர்த்து நன்கு கலக்கவும். வதக்கியதை நன்கு ஆற விடவும்.
பராத்தா செய்முறை
பிசைந்து வைத்துள்ள மாவை மீண்டும் லேசாக பிசைந்து கொண்டு, எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
உருண்டையை வர மாவில் தோய்த்து சப்பாத்தி கட்டையை பயன்படுத்தி 4 ” அளவு தடிமனாக உருட்டிக் கொள்ளவும்.
1 – 2 மேசைக்கரண்டி அளவு ஸ்டஃப்பிங்கை தேய்த்து வைத்துள்ள சப்பாத்தியின் நடுவில் வைத்து ஓரங்களை சுற்றிலும் மூடவும். இதனை மீண்டும் சப்பாத்தி கட்டையை பயன்படுத்தி 1 /2 அளவு தடிமனான சப்பாத்தியாக தேய்த்துக் கொள்ளவும்.தேய்க்கும்போது வர மாவு பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதே போல் மற்ற உருண்டைகளையும் தேய்த்துக் கொள்ளவும்.
சப்பாத்தி கல்லை சூடு செய்து, மிதமான சூட்டில் வைத்துக் கொள்ளவும்.
கல் சூடானதும், பராத்தாவை அதில் போட்டு இரண்டு புறமும் பிரவுன் கலராகும் வரை வேக விட்டு எடுக்கவும். விருப்பமெனில் பராத்தாவின் மேல் நெய் அல்லது எண்ணெய் தடவிக் கொள்ளலம்.
காலிபிளவர் பரத்தாவுடன் தயிர் அல்லது விருப்பமான ஊறுகாய் வைத்து பரிமாறவும்