Author Topic: ஐயங்கார் புளியோதரை  (Read 486 times)

Offline kanmani

ஐயங்கார் புளியோதரை
« on: October 18, 2013, 09:36:29 AM »
ஐயங்கார்  முறையில் புளியோதரை  செய்வதற்கான எளிய குறிப்பு.
தேவையான பொருட்கள்

    அரிசி  – 1 கப்
    புளி – பெரிய எலுமிச்சம் பழம் அளவு
    காய்ந்த மிளகாய்  – 3
    தனியா  – 1  தேக்கரண்டி
    வெந்தயம் – 1 /4 தேக்கரண்டி
    மிளகு  – 1 /2  தேக்கரண்டி
    பெருங்காயம்  – ஒரு சிட்டிகை
    மஞ்சள்தூள் – 1 /4 தேக்கரண்டி
    நல்லெண்ணெய்  – 2  மேசைக்கரண்டி
    கருவேப்பிலை  – 2 கொத்து
    உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை

    அரிசியை வேக வைத்து ஆற வைக்கவும்.
    இரண்டு கப் தண்ணீர் விட்டு புளியை ஊற வைத்து பின் சாறு எடுத்து வடிகட்டவும்.
    கடாயில் எண்ணெய் காய வைத்து கிள்ளிய காய்ந்த மிளகாயை சேர்த்து வதக்கவும்.
    பிறகு அதில் மஞ்சள்தூள், பெருங்காயம், புளிசாறு சேர்க்கவும்.
    புளிச்சாற்றைக் காய்ச்சி, அளவில் குறைத்து கெட்டியான குழம்பாக்கவும். கெட்டியானதும் அதில் மொறமொறப்பாக பொடியாக்கிய மிளகு, உப்பு சேர்க்கவும். அனலிளிருந்து இறக்கி ஆற வைக்கவும்.
    வெந்தயத்தையும், தனியாவையும் கொஞ்சம் எண்ணையில் வறுத்து பொடியாக்கிக் கொள்ளவும்.
    எல்லாவற்றையும் சாதத்தோடு சேர்த்து நன்றாகக் கலக்கி விடவும்.
    கொஞ்சம் எண்ணெயைச் சூடாக்கி கறிவேப்பிலை சேர்த்து சாதத்தில் கொட்டி கலக்கவும்.