Author Topic: ஜவ்வரிசி பாயசம்  (Read 466 times)

Offline kanmani

ஜவ்வரிசி பாயசம்
« on: October 18, 2013, 08:56:01 AM »


    ஜவ்வரிசி - ஒரு கப்
    பாசிப் பருப்பு - கால் கப்
    முதல் தேங்காய்ப் பால் - ஒரு கப்
    இரண்டாம் தேங்காய்ப் பால் - 2 கப்
    சர்க்கரை - ஒரு கப் அல்லது தேவைக்கேற்ப
    நெய் - 2 மேசைக்கரண்டி
    ஏலம் - 6
    முந்திரி, திராட்சை - விருப்பத்திற்கேற்ப

 

 
   

பருப்பை சிவக்க வறுத்துக் கொள்ளவும். ஏலத்தை வறுத்துப் பொடித்துக் கொள்ளவும். ஒரு மேசைக்கரண்டி நெய்யில் முந்திரி, திராட்சையை வறுக்கவும். மீதியுள்ள நெய்யில் ஜவ்வரிசியையும் வறுத்து எடுத்து வைக்கவும்.
   

பாசிப் பருப்புடன் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
   

பருப்பு வெந்ததும் இரண்டாம் தேங்காய்ப் பால் சேர்த்து கொதிக்க விடவும்.
   

பால் கொதி வந்ததும், அதில் ஜவ்வரிசி சேர்த்துக் கிளறி வேக விடவும்.
   

ஜவ்வரிசி வெந்ததும் சர்க்கரை சேர்த்து கொதிக்க வைக்கவும்.
   

அதன் பிறகு வறுத்த முந்திரி, திராட்சை, பொடி செய்த ஏலம் மற்றும் முதல் தேங்காய்ப் பால் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும்.
   

சுவையான ஜவ்வரிசி தேங்காய்ப் பால் பாயசம் தயார். (சூடாகவோ அல்லது குளிர வைத்தோ பரிமாறலாம்)