Author Topic: க்ரிஸ்பி பேபி கார்ன்  (Read 488 times)

Offline kanmani

க்ரிஸ்பி பேபி கார்ன்
« on: October 16, 2013, 09:01:07 PM »
என்னென்ன தேவை?

பேபி கார்ன் - 10 (அ) 12,
அரிசி மாவு - 2 டீஸ்பூன்,
சோளமாவு - 2 டேபிள்ஸ்பூன்,
இஞ்சி, பூண்டு விழுது - தலா ஒரு டீஸ்பூன்,
முந்திரித்தூள் - 1 டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்,
வெங்காயத்தாள் - அலங்கரிக்க,
மிளகுத்தூள், உப்பு - தேவைக்கேற்ப,
பொடியாக நறுக்கிய பூண்டு - ஒரு டீஸ்பூன்,
பொடியாக நறுக்கிய பார்ஸ்லி அல்லது மல்லி இலை - சிறிது,
எள் - 1 டேபிள்ஸ்பூன்.

எப்படிச் செய்வது? 

கொதிக்கும் தண்ணீரை அடுப்பில் இருந்து இறக்கி, நீளவாக்கில் வெட்டி சுத்தம் செய்த பேபிகார்னை அதில் போட்டு மூடிபோட்டு 2 நிமிடத்திற்கு பின்  வடித்து ஆறவிடவும். பின் இதில் எண்ணெய், வெங்காயத்தாள் தவிர மற்ற எல்லாவற்றையும் பேபிகார்னில் சேர்த்து உடையாமல் கலக்கி 10 நிமிடம்  ஊறவைத்து இந்தக் கலவையின் மேல் எள்ளை சிறிது சிறிதாக எண்ணெயில் பொரித்தெடுத்து போடவும். இதன்மேல் வெங்காயத்தாள் பொடித்தது  தூவி, தக்காளி சாஸ், சில்லி சாஸ் கொண்டு பரிமாறவும். இதை சைட் டிஷ் ஆகவும் பரிமாறலாம்.

குறிப்பு: மிக இளம் பேபி கார்ன் என்றால் சுடு தண்ணீரில் போடாமல் செய்யலாம்.