Author Topic: ~ வெஜ் மசாலா ஸ்பெஷல் ரைஸ் ~  (Read 559 times)

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227429
  • Total likes: 29056
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
வெஜ் மசாலா ஸ்பெஷல் ரைஸ்



தேவையானவை:
பாஸ்மதி அரிசி (வடித்து உதிர்த்தது) - 4 கப், உருளைக்கிழங்கு - கால் கிலோ, நறுக்கிய முட்டை கோஸ், ஆய்ந்த புதினா - தலா ஒரு கப், பச்சைப் பட்டாணி - அரை கப், வெங்காயம் - 2, கீறிய பச்சை மிளகாய் - 2, தக்காளி - 4, இஞ்சி - முந்திரி விழுது - 2 டேபிள்ஸ்பூன், கரம் மசாலாதூள் - அரை டீஸ்பூன், தனியாத்தூள், மிளகாய்த்தூள் - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

தாளிக்க:
பிரிஞ்சி இலை - 2, பட்டைத் துண்டு - 2, ஏலக்காய், கிராம்பு - தலா 4, சீரகம் - அரை டீஸ்பூன்.

செய்முறை:
உருளைக்கிழங்கைத் தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கி, எண்ணெயில் பொரித்துத் தனியே வைக்கவும். வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கவும்.
தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை எண்ணெய் விட்டு தாளித்து, இஞ்சி - முந்திரி விழுது, பச்சை மிளகாய், வெங்காயம், பட்டாணி, கோஸ் சேர்த்து வதக்கவும். பிறகு தக்காளி சேர்த்து கிரேவி போல் வந்ததும், தனியாத்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து நன்றாகக் கிளறவும். புதினா போட்டு புரட்டி இறக்கவும்.
இதில் வடித்த சாதத்தைப் போட்டு மெதுவாகக் கிளறி, பொரித்த உருளை துண்டுகளால் அலங்கரித்துப் பரிமாறவும்.