Author Topic: ~ 30 வகை பிரேக்ஃபாஸ்ட் - லஞ்ச் ~  (Read 1984 times)

Online MysteRy

Re: ~ 30 வகை பிரேக்ஃபாஸ்ட் - லஞ்ச் ~
« Reply #15 on: October 12, 2013, 02:15:34 PM »
ஸ்பைஸி பிரெட் ரோல்



தேவையானவை:
பிரெட் ஸ்லைஸ் - 4, உருளைக்கிழங்கு, கேரட், வெங்காயம் - தலா ஒன்று, கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய் - 2 கப், கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
ஜவ்வரிசியை  நன்றாக கழுவி, அரை மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு, அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பொட்டுக்கடலை பொடி, உப்பு, பெருங்காயத்தூள் சேர்க்கவும். இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லியை அரைத்து அதனுடன் சேர்க்கவும். இந்த மாவை வடைகளாக  தட்டி, எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

Online MysteRy

Re: ~ 30 வகை பிரேக்ஃபாஸ்ட் - லஞ்ச் ~
« Reply #16 on: October 12, 2013, 02:17:49 PM »
ஃப்ரைடு ஊத்தப்பம்



தேவையானவை:
 பச்சரிசி - 2 கப், உளுத்தம்பருப்பு - கால் கப், துவரம்பருப்பு, அவல் - தலா ஒரு கைப்பிடி அளவு, வெந்தயம் - ஒரு டீஸ்பூன்,  வெங்காயம், கேரட் - தலா ஒன்று, நறுக்கிய குடமிளகாய், கொத்தமல்லி - சிறிதளவு, இட்லி மிளகாய்ப்பொடி - 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம் பருப்பு - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை:
அரிசி, உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு, வெந்தயம், அவல் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து, நைஸாக அரைக்கவும். இதை மூன்று மணிநேரம் அப்படியே வைக்கவும். பிறகு, மாவை தவாவில் கனமான ஊத்தப்பமாக ஊற்றி மூடி வைத்து, வேகவிடவும். வெந்ததும் துண்டுகளாக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி, நறுக்கிய குடமிளகாய், கேரட், கொத்தமல்லி சேர்த்து மேலும் வதக்கவும். இதனுடன் இட்லி மிளகாய்ப்பொடி,  பெருங்காயத்தூள். உப்பு சேர்த்து நன்றாகக் கிளறி, பிறகு தோசைத் துண்டுகளை சேர்த்துக் கிளறி ஒரு நிமிடம் கழித்து இறக்கி பரிமாறவும்.

Online MysteRy

Re: ~ 30 வகை பிரேக்ஃபாஸ்ட் - லஞ்ச் ~
« Reply #17 on: October 12, 2013, 02:20:10 PM »
சப்பாத்தி  நூடுல்ஸ் ரோல்



தேவையானவை:
கோதுமை மாவு - ஒரு கப், நூடுல்ஸ் - ஒரு கப், பொடியாக நறுக்கிய குடமிளகாய் - கால் கப், பால் - 2 டீஸ்பூன், சீரகத்தூள் - கால் டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், தக்காளி சாஸ் - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
கோதுமை மாவில் பால், சீரகத்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். நூடுல்ஸை வேக வைத்து, குளிர்ந்த நீரில் நன்றாக அலசி வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, குடமிளகாயை சேர்த்து வதக்கவும். பிறகு நூடுல்ஸ், தக்காளி சாஸ் சேர்த்து நன்றாக கிளறி வைக்கவும். பிசைந்த கோதுமை மாவை சப்பாத்தியாக செய்யவும். தவாவை அடுப்பில் வைத்து, காய்ந்ததும் சப்பாத்தியை ஒரு நிமிஷம் போட்டு எடுத்து நடுவில் நூடுல்ஸ் வைத்து சுருட்டி, தவாவில் எண்ணெய் விட்டு, சுருட்டிய சப்பாத்தியை போட்டு வேகவிட்டு எடுக்கவும்.

Online MysteRy

Re: ~ 30 வகை பிரேக்ஃபாஸ்ட் - லஞ்ச் ~
« Reply #18 on: October 12, 2013, 02:22:13 PM »
இட்லி  பனீர் மசாலா ஃப்ரை



தேவையானவை:
இட்லி - 4, பனீர் - ஒரு கப், வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய்  - தலா ஒன்று, இட்லி மிளகாய்ப்பொடி - 2 டீஸ்பூன், கொத்தமல்லி - சிறிதளவு, நல்லெண்ணெய் - அரை கப், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
இட்லியை சதுரமாக 'கட்’ செய்து வைக்கவும். பனீரையும் அதே போல் செய்து வைக்கவும். வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு முதலில் வெங்காயத்தை வதக்கி, பிறகு பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து நன்றாக சுருள வதக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு பனீரை வறுத்து எடுக்கவும். இட்லியையும் ஃப்ரை செய்யவும். பிறகு இரண்டையும் சேர்த்து... உப்பு, வெங்காயம் - தக்காளி கலவை, இட்லி மிளகாய்ப்பொடி சேர்த்து நன்றாக கிளறி, கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.

Online MysteRy

Re: ~ 30 வகை பிரேக்ஃபாஸ்ட் - லஞ்ச் ~
« Reply #19 on: October 12, 2013, 02:24:10 PM »
புதினா  சீஸ் சாண்ட்விச்



தேவையானவை:
புதினா - ஒரு கப், கொத்தமல்லி - சிறிதளவு, பச்சை மிளகாய் - ஒன்று, எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், சீஸ் - 2 ஸ்லைஸ், வெண்ணெய் - ஒரு டீஸ்பூன், வெள்ளரிக்காய் துண்டு- 2, பிரெட் -  4 ஸ்லைஸ், உப்பு - சிறிதளவு.

செய்முறை:
புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய் எல்லாவற்றையும் விழுதாக அரைத்துக்கொள்ளவும். உப்பு ஒரு சிட்டிகை, எலுமிச்சைச் சாறு சேர்க்கவும். ஒரு பிரெட் ஸ்லைஸில் வெண்ணெய், சிறிதளவு புதினா விழுதை தடவி, சீஸ் ஒரு ஸ்லைஸ் வைத்து அதற்கு மேல் வெள்ளரிக்காய் துண்டு, இன்னொரு பிரெட் ஸ்லைஸ் வைத்து, டோஸ்டரில் வைத்து டோஸ்ட் செய்யவும். இதேபோல மற்ற பிரெட் ஸ்லைஸ்களையும் செய்துகொள்ளவும்

Online MysteRy

Re: ~ 30 வகை பிரேக்ஃபாஸ்ட் - லஞ்ச் ~
« Reply #20 on: October 12, 2013, 02:26:17 PM »
சாக்லேட் சாண்ட்விச்



தேவையானவை:
பிரெட் - 2 ஸ்லைஸ், வெண்ணெய் - ஒரு டீஸ்பூன், சாக்லேட் பார் - ஒன்று.

செய்முறை:
இரண்டு ஸ்லைஸ் பிரெட்டிலும் வெண்ணெயை தடவி வைக்கவும். சாக்லேட்டை இரண்டாக செய்து, பிறகு ஒரு ஸ்லைஸின் இரண்டு கர்னரில் வைத்து, மற்றொரு பிரெட் ஸ்லைஸை எடுத்து மேலே வைத்து, பிரெட் டோஸ்ட்டரில் வைத்து டோஸ்ட் செய்யவும். சாக்லேட் உருகி, சூப்பர் டேஸ்ட்டில் உருவாகும் இந்த சாண்ட்விச்சை குட்டீஸ் மிகவும் ரசித்து சாப்பிடுவார்கள்.

Online MysteRy

Re: ~ 30 வகை பிரேக்ஃபாஸ்ட் - லஞ்ச் ~
« Reply #21 on: October 12, 2013, 02:28:21 PM »
வெள்ளை அப்பம்



தேவையானவை:
பச்சரிசி, புழுங்கலரிசி - தலா அரை கப், பச்சை மிளகாய் - 2, தேங்காய் துருவல் - அரை கப், கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு,  இஞ்சி - சிறிய துண்டு, பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய் - 2 கப், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்து, அதனுடன் தேங்காய் துருவல், பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு, கறிவேப்பிலை சேர்த்து நைஸாக அரைக்கவும். கொஞ்சம் புளித்ததும் கொத்தமல்லி, பெருங்காயம் சேர்க்கவும். கடாயில் எண்ணெய் விட்டு விட்டு, காய்ந்ததும் குழிக்கரண்டியால் மாவை எடுத்து ஊற்றி, வேகவிட்டு எடுக்கவும்.

Online MysteRy

Re: ~ 30 வகை பிரேக்ஃபாஸ்ட் - லஞ்ச் ~
« Reply #22 on: October 12, 2013, 02:30:24 PM »
மேக்ரோனி மசாலா



தேவையானவை:
மேக்ரோனி (டிபர்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) - ஒரு கப், நறுக்கிய குடமிளகாய் - ஒரு கப், வெங்காயம், கேரட் - தலா ஒன்று, பச்சைப் பட்டாணி - ஒரு கப், கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், தக்காளி சாஸ் - 2 டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
மேக்ரோனியை ஒரு சிட்டிகை உப்பு, ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து தண்ணீரில் வேக வைக்கவும். பிறகு குளிர்ந்த நீரில் அலசி வைக்கவும். கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, வதங்கியதும் நறுக்கிய குடமிளகாய், கேரட் மற்றும் பச்சைப் பட்டாணி சேர்த்து வதக்கவும். பிறகு, வேக வைத்த மேக்ரோனி, உப்பு, தக்காளி சாஸ், கரம் மசாலாத்தூள் சேர்த்து வதக்கி இறக்கவும்.

Online MysteRy

Re: ~ 30 வகை பிரேக்ஃபாஸ்ட் - லஞ்ச் ~
« Reply #23 on: October 12, 2013, 02:32:26 PM »
வெஜிடபிள் தோசை



தேவையானவை:
தோசை மாவு - ஒரு கப், நறுக்கிய மஞ்சள் நிற குடமிளகாய், சிவப்பு நிற குடமிளகாய், பச்சை குடமிளகாய் - தலா கால் கப், பச்சைப் பட்டாணி, பொடியாக நறுக்கிய வெங்காயம் - தலா கால் கப், துருவிய சீஸ் - கால் கப், எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், கொத்தமல்லி - சிறிதளவு.

செய்முறை:
தவாவில் தோசை மாவை கொஞ்சம் கனமாக ஊற்றவும். பிறகு காய்கறிகளை தோசை மேல் பரவலாக வைத்து, சீஸை மேலாக தூவிவிடவும். சுற்றிலும் எண்ணெய் விட்டு மூடி வைக்கவும் (அடுப்பை 'சிம்’மில் வைத்து செய்யவும்). ஒரு பக்கம் வெந்ததும் அப்படியே எடுத்து பரிமாறவும்.

Online MysteRy

Re: ~ 30 வகை பிரேக்ஃபாஸ்ட் - லஞ்ச் ~
« Reply #24 on: October 12, 2013, 02:34:54 PM »
பனீர் வெஜ் சாண்ட்விச்



தேவையானவை:
துருவிய பனீர் - ஒரு கப், வேக வைத்த உருளைக்கிழங்கு - ஒன்று, வெங்காயம் - ஒன்று, துருவிய பீட்ரூட் - கால் கப், கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், வெண்ணெய் - ஒரு டீஸ்பூன், பிரெட் ஸ்லைஸ் - 4, எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
பிரெட் ஸ்லைஸில் வெண்ணெயை தடவி வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதங்கியதும் உருளைக்கிழங்கு, பீட்ரூட், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கி வைக்கவும். ஒரு பிரெட் ஸ்லைஸ் நடுவில் காய்கறி கலவை வைத்து, அதற்கு மேல் பனீரை வைத்து இன்னொரு பிரெட் ஸ்லைஸால் மூடி, டோஸ்ட் செய்யவும். மீதம் இருக்கும் 2 பிரெட் ஸ்லைஸிலும் இதே போல் செய்துகொள்ளவும்.

Online MysteRy

Re: ~ 30 வகை பிரேக்ஃபாஸ்ட் - லஞ்ச் ~
« Reply #25 on: October 12, 2013, 02:38:42 PM »
வெஜ் பாஸ்தா



தேவையானவை:
 பாஸ்தா (டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) - ஒரு கப், குடமிளகாய் - அரை கப்,  மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
வொயிட் சாஸ் செய்வதற்கு: மைதா - கால் கப், பால் - அரை கப், வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை:
கடாயில் வெண்ணெயை சேர்த்து, மைதா மாவை வறுத்துக் கொள்ளவும். பிறகு பாலை விட்டு நன்றாக கிளறி வைக்கவும். இதுதான் வொயிட் சாஸ். பாஸ்தாவை ஒரு டீஸ்பூன் எண்ணெய், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து வேக வைத்து, குளிர்ந்த நீரில் அலசி வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு குடமிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு வேக வைத்த பாஸ்தா, வெள்ளை சாஸ், மிளகுத்தூள், உப்பு சேர்த்துக் கிளறி இறக்கி வைக்கவும்.

Online MysteRy

Re: ~ 30 வகை பிரேக்ஃபாஸ்ட் - லஞ்ச் ~
« Reply #26 on: October 12, 2013, 03:00:08 PM »
குடமிளகாய் ரைஸ்



தேவையானவை:
பொடியாக நறுக்கிய குடமிளகாய் - ஒரு கப், சாதம் - ஒரு கப், கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு  - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, பச்சை மிளகாய் - ஒன்று, எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு தாளித்து... கீறிய பச்சை மிளகாய், குடமிளகாயை சேர்த்து வதக்கவும். பிறகு, சாதம்,  மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு சேர்த்துக் கலக்கவும்.

Online MysteRy

Re: ~ 30 வகை பிரேக்ஃபாஸ்ட் - லஞ்ச் ~
« Reply #27 on: October 12, 2013, 03:01:31 PM »
ஸ்பெகடி



தேவையானவை:
ஸ்பெகடி (குச்சி போல் இருக்கும் - டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) - கால் பாக்கெட், பேஸிக் பவுடர் - அரை டீஸ்பூன், நசுக்கிய பூண்டு - ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், பாஸ்தா சாஸ் (டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) - 4 டேபிள்ஸ்பூன், துருவிய சீஸ் - அரை கப், ஆலிவ் ஆயில் (அ) சூரியகாந்தி எண்ணெய் - 2 டீஸ்பூன்,  உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
ஸ்பெகடியை உடைத்து ஒரு டீஸ்பூன் எண்ணெய், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு வேக வைக்கவும். பிறகு குளிர்ந்த நீரில் அலசவும். கடாயில் எண்ணெய் விட்டு பேஸிக் பவுடர், பூண்டு, மிளகுத்தூள், பாஸ்தா சாஸ் சேர்த்து புரட்டி, வேக வைத்த ஸ்பெகடியை சேர்க்கவும். பிறகு, உப்பு சேர்த்து நன்றாகக் கிளறி, கடைசியில் சீஸ் சேர்த்து இறக்கவும்.

Online MysteRy

Re: ~ 30 வகை பிரேக்ஃபாஸ்ட் - லஞ்ச் ~
« Reply #28 on: October 12, 2013, 03:03:15 PM »
டோக்ளா



தேவையானவை:
கடலை மாவு - ஒரு கப், ரவை - ஒரு டேபிள்ஸ்பூன், எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், சர்க்கரை - மூன்றரை டீஸ்பூன், ஈனோ - ஒன்றரை டீஸ்பூன், இஞ்சி -  பச்சை மிளகாய் அரைத்த விழுது -  ஒரு டீஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் - ஒன்று, பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய் - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
கடலை மாவு, ரவை, சர்க்கரை, ஈனோ, இஞ்சி - பச்சைமிளகாய் விழுது, நறுக்கிய பச்சை மிளகாய், எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்தில் கலக்கவும். பாத்திரத்தில் எண்ணெய் தடவி மாவை அதில் விட்டு குக்கரில் வைக்கவும். 15 நிமிஷம் கழித்து எடுத்து ஆறியதும் 'கட்’ செய்து... கடுகு, பெருங்காயம் தாளித்து சேர்த்து, நறுக்கிய கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

Online MysteRy

Re: ~ 30 வகை பிரேக்ஃபாஸ்ட் - லஞ்ச் ~
« Reply #29 on: October 12, 2013, 03:04:35 PM »
ராகி ரவா கொழுக்கட்டை



தேவையானவை:
ஆச்சி கேழ்வரகு மாவு - ஒரு கப், ஆச்சி ரவா இட்லி மிக்ஸ் - ஒன்றரை கப், தயிர் - ஒரு கப், கேரட் துருவல், தேங்காய் துருவல் - தலா ஒரு டேபிள்ஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி - ஒரு டேபிள்ஸ்பூன், சோம்புத்தூள் - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
ஆச்சி ரவா இட்லி மிக்ஸுடன் தயிர் சேர்த்து அரை மணி நேரம் ஊறவிடவும். அதற்குள் ஆச்சி கேழ்வரகு மாவை வெறும் வாணலியில் நன்கு வறுத்து... அத்துடன் உப்பு சேர்த்து, கேரட் துருவல், தேங்காய் துருவல், கொத்தமல்லி, சோம்புத்தூள் சேர்க்கவும். அந்தக் கலவையை ஆச்சி ரவா இட்லி மிக்ஸுடன் சேர்த்து, கெட்டியாகக் கலந்து கொழுக்கட்டைகளாகப் பிடித்து, ஆவியில் வேகவைத்து (பத்து நிமிடத்தில் வெந்துவிடும்) இறக்கவும். சுடச்சுட பரிமாறவும்.
மாவை பால்ஸ்களாகவும் உருட்டி வேக வைக்கலாம். இதற்கு தொட்டுக் கொள்ள தேங்காய் சட்னி சிறந்த காம்பினேஷன்