என்னென்ன தேவை?
மீடியம் சைஸ் வெட்டாத பிரெட் - 1,
ரெடிமேடாக கிடைக்கும் ஆலிவ் - சிறிது,
துருவிய சீஸ் - அரை கப் (அ) சீஸ் சிலைஸ் - 4,
பெரிய பெங்களூர் தக்காளி,
பெரிய வெள்ளரிக்காய் - தலா 1 (வட்டமாக நறுக்கியது),
வெண்ணெய் - 2 டீஸ்பூன்,
சாலட் இலைகள், உப்பு,
மிளகுத்தூள் - தேவைக்கேற்ப.
எப்படி செய்வது?
பேக்கரியில் (பூண்டு) கார்லிக் பிரெட் என்று கேட்டு வாங்கவும். அதனை நீட்டு வாக்கில் வெட்டி அதனுள் வெண்ணெய் தடவி அதன் மேல் சாலட் இலைகள் பின் சீஸை வைத்து வட்டமாக நறுக்கிய தக்காளி, வெள்ளரிக்காய், ஆலிவ், உப்பு, மிளகுத்தூள் தூவவும். மேல் பாகத்து பிரெட் லோஃப்பிலும் வெண்ணெய் தடவி அழுத்தி மூடி ஒரு பிளேட்டில் சாலட் இலையை வைத்து அதன் மேல் பிரெட் லோஃப்பை வைத்து அலங்கரித்து பார்ட்டியில் டேபிள் மேல் இந்த பிரெட் டிஷ்ஷை வைக்கவும். அதிகமாக சாப்பிட பிடிக்காதவர்கள் கத்தி கொண்டு வெட்டி தேவையானதை சாப்பிடலாம். அலங்கரிப்பு... ஒரு பிளேட்டில் சாலட் இலைகள் வைத்து அதன் மேல் பிரெட் லோஃப் வைத்து பிரெட்டை சுற்றி தக்காளி, வெள்ளரி கொண்டு அலங்கரிக்கவும்.