என்னென்ன தேவை?
மேல் மாவுக்கு...
மைதா - 250 கிராம்,
சமையல் சோடா - 1/2 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
தயிர் - 2 கப்,
பால் - 1/2 கப்,
சர்க்கரை - 1 டீஸ்பூன்,
நெய் - சிறிது,
எண்ணெய் - தேவைக்கு.
பூரணம் செய்வதற்கு....
வறுத்து ஊறவைத்த சிறு பருப்பு அல்லது கடலைப் பருப்பு - சிறிது, உப்பு - தேவைக்கேற்ப, சீரகம் - 1 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4
எப்படி செய்வது?
மேல் மாவு செய்யும் முறை...
மைதாவை சமையல் சோடாவுடன் சேர்த்து சலித்துக் கொள்ளவும், அதில் தயிர், பால், நெய், சர்க்கரை, உப்பு தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து பூரிமாவு பதத்திற்கு நன்கு பிசைந்து கொள்ளவும். மாவை இரண்டு மணி நேரம் மூடி வைக்கவும்.
பூரணம் செய்யும் முறை...
ஊறவைத்த பருப்பு, உப்பு, சீரகம், மிளகாய் சேர்த்து கரகரப்பாக அரைத்து, சிறிது எண்ணெயில் வதக்கி வைக்கவும். இப்போது மேல் மாவில் சிறிது எடுத்து உருண்டைகளாகச் செய்து அதை சொப்பு போல் செய்து, 1 டீஸ்பூன் பூரணத்தை அதன் உள் வைத்து இழுத்து மூடி நெய் தொட்டு பெரிய பூரி போல் இட்டுக் கொண்டு கடாயில் எண்ணெய் விட்டுக் காய்ந்தவுடன் பட்டூராவை இட்டு பொன்னிறமாகப் பொரித்து எடுத்து சன்னா மசாலாவுடன் பரிமாறவும்.