Author Topic: வாழைத்தண்டு பொரியல்  (Read 483 times)

Offline kanmani

வாழைத்தண்டு பொரியல்
« on: October 11, 2013, 05:17:15 PM »
வாழைத்தண்டு பொரியல்

என்னென்ன தேவை?
பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு - ஒரு கைப்பிடி, பாசிப்பருப்பு - 2 டீஸ்பூன், பெரிய வெங்காயம் - சிறியது 1, பச்சை மிளகாய் - 2, மிளகாய் வற்றல்  - 1, எண்ணெய் - தேவையான அளவு, கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி, தேங்காய்த் துருவல், உப்பு - தேவையான அளவு.

எப்படிச் செய்வது?
பொடியாக வெட்டி வைத்த வாழைத்தண்டை வேக வைக்கவும். பாசிப்பருப்பினை நனைய வைத்து, கடைசியில் உப்பு சேர்த்து வேகவைக்கவும்.  பாசிப்பருப்பு பூப்பூவாக இருக்க வேண்டும்.
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, கறிவேப்பிலை போட்டு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், மிளகாய்  வற்றல் வதங்கியதும், வேகவைத்த வாழைத்தண்டினையும் சேர்த்து, தேங்காய்த்துருவல், கொத்தமல்லி இலை தூவிப் பரிமாறவும்.