Author Topic: ~ முத்துக்கள் பத்து! ~  (Read 1112 times)

Offline MysteRy

~ முத்துக்கள் பத்து! ~
« on: October 11, 2013, 04:49:24 PM »
கிரானைட் அலர்ஜி!



வீடுகளில் பதிக்கும் கிரானைட்ஸ்... எண்ணெய், காய்கறி போன்றவற்றின் காரணமாக கறைபடிந்து அழுக்கானால்... ஆசிட் பயன்படுத்தித் துடைக்கக் கூடாது. அப்படிச் செய்தால், நிறம் மாறுவதுடன் பளபளப்பும் பறிபோய்விடும்!

Offline MysteRy

Re: ~ முத்துக்கள் பத்து! ~
« Reply #1 on: October 11, 2013, 04:50:43 PM »
மரப்பொருட்களைப் பாதுகாக்க..!



மரப்பொருட்கள் மீது தேநீர் சிந்தினால், வெஜிடபிள் எண்ணெய் அல்லது ஆல்கஹாலை மென்மையான துணியில் நனைத்துத் துடைக்க வேண்டும். சூரிய வெளிச்சம் அல்லது மழை போன்றவை மரத்தாலான பொருட்களின் மீது படாமல் பாதுகாப்பது நல்லது. இவை, மரங்களின் மேல் தோலில் உள்ள விசேஷ படிமத்துடன் வேதி வினைபுரிந்து, சேதத்தை விளைவிக்கும்.

Offline MysteRy

Re: ~ முத்துக்கள் பத்து! ~
« Reply #2 on: October 11, 2013, 04:51:57 PM »
கண்ணாடி பளபளக்க..!



கண்ணாடியில் உள்ள கறைகளைப் போக்க ஈரமான துணியைக் கொண்டு துடைப்பது வழக்கம். இப்படித் துடைப்பதனால் காய்ந்த பிறகு கறைகள் கண்ணுக்குத் தெரியும். ஈரமான துணிக்குப் பதிலாக செய்தித்தாள்களைப் பயன்படுத்தும்போது கண்ணாடியில் உள்ள ஈரம் முற்றிலும் உறிஞ்சப்படும். அதன்பிறகு காய்ந்த காட்டன் துணியை வைத்து துடைத்தால் மற்ற கறைகளும் அகலும். கண்ணாடி 'பளிச்'சென்றிருக்கும்.

Offline MysteRy

Re: ~ முத்துக்கள் பத்து! ~
« Reply #3 on: October 11, 2013, 04:53:19 PM »
தரை துடைக்க...



ஒரு பாக்கெட் தண்ணீரில் வினிகர் அல்லது எலுமிச்சைச் சாறு 2 டேபிள்ஸ்பூன் அளவு கலந்து மாப் கொண்டு வீட்டை துடைத்தால் தரை பளபளக்கும். எலுமிச்சை மற்றும் வினிகரில் உள்ள ஆசிட் தன்மை தரையைச் சுத்தப்படுத்துவதுடன், தரையில் உள்ள அழுக்குகள் மற்றும் கிருமிகள் நீங்குவதோடு, வீடும் எலுமிச்சை மணத்துடன் கமகமக்கும். மரத்தாலான தரை பாகங்களுக்கு இதைப் பயன்படுத்த வேண்டாம். எலுமிச்சை மற்றும் வினிகர் ஆகியவை மரத்துடன் வேதிவினை புரியக்கூடியவை. இதனால் அந்தத் தரைக்கு பாதிப்பு ஏற்படலாம்!

Offline MysteRy

Re: ~ முத்துக்கள் பத்து! ~
« Reply #4 on: October 11, 2013, 04:54:39 PM »
சூயிங்கம் கறை நீக்க...



துணிகளில் சூயிங்கம் ஒட்டிக் கொண்டால், அந்தத் துணியை ஃப்ரீசரில் வைத்தால், சூயிங் கம் உறைந்துவிடும். பின் அதனை நகம் அல்லது கூர்மையற்ற கத்தி போன்றவற்றைப் பயன்படுத்தி சுரண்டி எடுத்தால், அவை எளிதில் துணிகளில் இருந்து மொத்தமாக வந்துவிடும். சூயிங்கம் ஒட்டியுள்ள இடத்தில் ஐஸ் கட்டிகள் வைத்துத் தேய்த்தோ... அல்லது வினிகரை வெதுவெதுப்பாகச் சூடேற்றி அந்த இடத்தைச் சுற்றிலும் ஊற்றியோ... அதை எளிதில் நீக்கிவிடலாம்.

Offline MysteRy

Re: ~ முத்துக்கள் பத்து! ~
« Reply #5 on: October 11, 2013, 04:56:21 PM »
ஸ்பான்ஞ்சுகளைப் பராமரிக்க..!



பாத்திரம் தேய்க்கப் பயன்படுத்தும் ஸ்பாஞ்சு களை சோப்பு நீர் அல்லது சோப்புக் கட்டி மீது அப்படியே அழுக்குடன் வைப்பது நல்லதல்ல. அது கிருமித் தொற்றுக்கு ஏதுவாகிவிடும். வேலை முடிந்ததும் குளிர்ந்த நீரில் கழுவினால் அழுக்குகள் நீங்கி விடும். பின்னர் ஸ்பாஞ்சில் உள்ள  தண்ணீரை பிழிந்து வெளியேற்றி உலர்த்தி எடுத்து வைக்கலாம். அதிக சூடான வெந்நீரில் ஊற வைத்தும் கிருமிகளை முற்றிலும் அழிக்கலாம். மிகவும் அழுக்காகி, நைந்துவிட்ட ஸ்பாஞ்சுகளை தூர எறிந்துவிடவும்.

Offline MysteRy

Re: ~ முத்துக்கள் பத்து! ~
« Reply #6 on: October 11, 2013, 04:57:46 PM »
சமையலறை டைல்ஸ் பளிச்சிட..!



சமையல் அறையில் கேஸ் அடுப்புக்கு பின்புறம் ஒட்டப்பட்டிருக்கும் டைல்ஸ், எண்ணெய் பிசுபிசுப்புடன் அழுக்கேறியிருக்கும். சோப்புத் தூளுடன் சமையல் சோடாவை கலந்து கொண்டு ஸ்க்ரப் (scrub) மூலம் தொட்டுத் தேய்க்க... டைல்ஸில் உள்ள கறைகள் நீங்கிவிடும். பிறகு, நன்கு பிழிந்த ஈரத்துணியைக் கொண்டு துடைப்பதன் மூலம் டைல்ஸ் மினுமினுக்கும்.

Offline MysteRy

Re: ~ முத்துக்கள் பத்து! ~
« Reply #7 on: October 11, 2013, 05:46:10 PM »
ஜன்னல், கதவுகளைத் துடைக்க..!



வீட்டிலிருக்கும் ஜன்னல், கதவுகளில் பூ வேலைப் பாடுகள் இருந்தால், தூசுகள் எளிதாக படிந்து, அவற்றின் பொலிவை கெடுத்துவிடும். பல் துலக்கும் பிரஷ்/பெயின்ட் பிரஷ் கொண்டு துடைத்தால்... அவை, கண்களைக் கொள்ளை கொள்ளும்!

Offline MysteRy

Re: ~ முத்துக்கள் பத்து! ~
« Reply #8 on: October 11, 2013, 05:47:18 PM »
சின்க் மற்றும் வாஷ்பேஸின்..!



சமையல் அறை சின்க், வாஷ்பேஸின் போன்றவை அடைப்பு ஏற்பட்டு துர்நாற்றம் வீசக்கூடும். கொதிக்கும் நீரில் எலுமிச்சைச் சாறு கலந்து, சின்க் மற்றும் வாஷ்பேஸின் துளைகள் வழியாக ஊற்ற... அடைப்பு நீங்கிவிடும்.

Offline MysteRy

Re: ~ முத்துக்கள் பத்து! ~
« Reply #9 on: October 11, 2013, 05:48:16 PM »
ஸ்டீல் குழாய்கள் பராமரிப்பு..!



கிணற்று நீரை உபயோகப்படுத்தும் வீடுகளில் ஸ்டீல் குழாய்கள் துருப்பிடித்து, மஞ்சள் கறைகளுடன் இருக்கும். குறைந்தது வாரம் இரண்டு நாட்களாவது குழாய்களை மெல்லிய காட்டன் துணியால் துடைப்பதுடன், காய்ந்த பிறகு காட்டன் துணியில் தேங்காய் எண்ணெயைத் தொட்டு துடைக்க... சோப்புக் கறை மற்றும் உப்பு நீர் கறையிலிருந்து குழாய்கள் பாதுகாக்கப்படும்.