Author Topic: ~ டிப்ஸ்... டிப்ஸ்...வீட்டுக்குறிப்புக்கள் ~  (Read 4806 times)

Online MysteRy



விருந்தாளிகளுக்கு உணவு பரிமாறும்போது, தக்காளி சட்னி, சாஸ், வெங்காயச் சட்னி, ஊறுகாய், போன்ற சிவந்த நிறமுள்ள அயிட்டங்களையும், எண்ணெய், நெய் அதிகம் சேர்த்த பொருட்களையும் நேரடியாக தட்டில் வைக்காதீர்கள். சிறிய கிண்ணங்களில் வைத்து பரிமாறினால், தட்டுகளில் கறை படியாது. சுத்தம் செய்யவதும் எளிது.

Online MysteRy



பாத்திரங்களைத் தேய்த்து கழுவி வைக்கும் பெரிய கம்பி வலைக்கூடையில் சிறிய ஸ்பூன்களை வைக்க ஓட்டைகள் இல்லாமல் இருக்கும். இதற்கு, ஒரு சிறிய டீஸ்பூன் ஸ்டாண்டை, அந்த வலைக்கூடையின் பக்க வாட்டில் கட்டிவிடுங்கள். டீஸ்பூன் கீழே விழாமல் இருக்கும்.

Online MysteRy



துணிகளை அயர்ன் செய்யும்போது தண்ணீர் தெளிப்பது வழக்கம். அந்த தண்ணீரில் சிறிது பன்னீர் அல்லது யூடிகொலனை கலந்து விடுங்கள். சென்ட் போடாமலே ஆடைகள் மணக்கும்.

Online MysteRy



வடை மாவு நீர்த்துப் போய் விட்டால், ஒரு பிடி அவலை மாவுடன் கலந்து, ஐந்து நிமிடங்கள் வைத்திருங்கள். பிறகு வடையாக தட்டி எடுங்கள். அபாரமான ருசியில் வடை மணக்கும்.

Online MysteRy

அடை, தோசை, வடை மாவில் வெங்காயம், கீரை, வாழைப்பூவை நேரடியாக சேர்க்காதீர்கள். சிறிது எண்ணெயில் நன்றாக வதக்கிய பிறகு சேர்த்தால், அவை நறுக்கென்று வாயில் அகப்படாமல், நன்கு வெந்து சுவையாக இருக்கும்.

Online MysteRy

அல்வா, கேசரி, உப்புமா கிளறும்போது ஜல்லிக் கரண்டியின் பின்பக்கத்தைத் திருப்பி வைத்துக் கிளறுங்கள் (அதாவது கரண்டியின் குழிவான பக்கம் கீழே இருப்பது போல்). இதனால் கையும் வலிக்காது. கிளறுவதும் ஈஸி.

Online MysteRy



ஃபெவிகாலை பயன்படுத்தியதும், அதில் சில துளிகள் தண்ணீர் விட்டு மூடி வையுங்கள். மீண்டும் எடுத்து உபயோகிக்கும்போது தண் ணீரை வடித்துவிட்டு பயன் படுத்தினால், காய்ந்து போகா மல் நீண்ட நாட்களுக்கு வரும்.

Online MysteRy



தோசை மாவு புளித்து விட்டதா? அதில் கால் டீஸ்பூன் டேபிள் சால்ட், அரை டம்ளர் வெந்நீரை ஊற்றிக் கலக்கி, தோசை வார்த்தால் புளிப்பு மறைந்து ருசியும் அமோகமாக இருக்கும்.

Online MysteRy

ஃப்ரிட்ஜில் உள்ள டிரேக்க ளில் நேரடியாக காய்களை அடுக்கும்போதுஅழுக்கு படிந்து விடும். ஒரு பனியன் துணியைத் தண்ணீரில் நனைத்து ஒட்டப் பிழிந்து டிரேயில் விரித்து விடுங்கள். இப்போது காய்களை அதன் மேல் வைத்து, அதே துணியால் சுற்றி விடுங்கள். ஃபிரிட்ஜும் அழுக்காகாது... காய்களும் வாடாமல் ஃப்ரெஷ்ஷாக இருக்கும்

Online MysteRy



கொத்தமல்லித்தழை வாடாமல் ஒரு வாரம் வரை பசுமையாக இருக்க வேண்டுமா? வேர் பாகத்தை மட்டும் வெட்டிவிட்டு, மற்றதை ஒரு பாத்திரத்தில் போட்டு, பாதியளவு தண்ணீர் விட்டு, மூடாமல் ஃபிரிட்ஜில் வையுங்கள். வாடிப்போன கொத்தமல்லித் தழைகளைகூட இதேபோல் வைத்தால் ஃபிரெஷ்ஷாக மாறி விடும்.

Online MysteRy

இரண்டு ஸ்பூன் சோளமாவை சிறிது தண்ணீர் விட்டுக் கரைத்து, தோசை மாவுடன் கலந்து தோசை வார்த்துப் பாருங்கள். மாவு கல்லில் ஒட்டாமல் தோசை நன்றாக சுட வரும்.

Online MysteRy



குழந்தைகளுக்கு வெள்ளை தேங்காய் பர்ஃபி சாப்பிட்டு போரடித்துவிடும். கலர் கலராக பர்ஃபி செய்ய ஒரு ஐடியா. பர்ஃபி செய்ததும் தட்டில் கொட்டுவதற்குமுன், சாக்லெட் மற்றும் ஸ்டிராபெர்ரி பானத்துக்கான பவுடரைச் சேர்த்துக் கிளறுங்கள். வண்ண வண்ண கலர்களில், வாய்க்கும் ருசியாக இருக்கும்.

Online MysteRy

தண்ணீரைப் பயன்படுத்தாமலேயே பூஜை விளக்குகளைப் பளிச்சென மாற்றமுடியும். சுத்தம் செய்ய வேண்டிய பகுதியில் வெள்ளை பல்பொடியைத் தூவி, உலர்ந்த துணியால் நன்றாக அழுத்தித் துடையுங்கள். கருமை நிறம் காணாமல் போய் விளக்கு பளீரென மின்னும்.

Online MysteRy

சேமியா, ஜவ்வரிசியில் பாயசம் செய்யும்போது, முதலிலேயே எல்லாப் பாலையும் சூடாகச் சேர்த்து விட்டால் பாயசம் கெட்டியாகி விடும். பாயசத்துக்கு தேவையானதை ரெடி செய்து விட்டு, பரிமாறும்போது, காய்ச்சிய பாலைக் கலந்து விடுங்கள். பாயசம் கெட்டியாகாமல், சுவையாக இருக்கும்.

Online MysteRy

டைனிங் டேபிளில் விரிக்கும் வண்ண 'மேட்'டுகள் பழையதாகிவிட்டால், தூக்கி எறியாதீர்கள். சதுர வடிவ துண்டுகளாக வெட்டி, எண்ணெய்ப் பாத்திரங்கள், பாட்டில்களுக்கு அடியிலும், காய்கறிகள் நறுக்கும்போது, தரையில் அமரும்போதும், கீழே விரித்துக் கொள்ளலாம்.