Author Topic: ~ டிப்ஸ்... டிப்ஸ்...வீட்டுக்குறிப்புக்கள் ~  (Read 4796 times)

Offline MysteRy



சௌசௌ காயை நறுக்கும்போது கை பிசுபிசுப்பாகிவிடும். இதைத் தவிர்க்க... காயை நீள வாக்கில் இரண்டாக வெட்டி, ஒன்றோடு ஒன்றைத் தேய்த்தால் நுரை வரும். பிறகு தண்ணீரில் கழுவிவிட்டு நறுக்கினால் பிசுபிசுப்பே படியாது.

Offline MysteRy



வீட்டின் ஜன்னல், ஷோ கேஸ் போன்ற கண்ணாடி பொருட்களில் கீறல் விழுந்துவிட்டதா? கீறல் விழுந்த இடத்தில் ஏதேனும் ஒரு கலர் பெயின்ட்டை அடியுங்கள். கீறல் தெரியாமல், கண்ணாடியும் கலர்ஃபுல் லாக இருக்கும்.

Offline MysteRy



ஃபிரிட்ஜ் கதவு எப்போதும் பளிச்சென்று இருக்க... லிக்விட் (அ) சோப் பவுடருடன் சில துளிகள் சொட்டு நீலத்தை விட்டு, நுரை வரும் வரை கலக்குங்கள். இந்த நுரையை மட்டும் எடுத்து துடைத்தால் போதும். பளபளவென்று இருக்கும்.

Offline MysteRy



வெயில் காலத்தில் இரவே பாலை உறை ஊற்றும்போது, தயிர்
புளித்துவிடும். இதற்கு... மூன்று அடுக்கு டிபன் கேரியரில் நடு அடுக்கில் உறை ஊற்றிய பாலையும், மேலும் கீழும் உள்ள அடுக்குகளில் குளிர்ந்த நீரையும் நிரப்பி வைத்தால்... அதிகம் புளிக்காமல் இருக்கும்.

Offline MysteRy



துணிகளில் கறை ஏற்பட்டுவிட்டால், மறுநிமிடமே அந்த இடங்களில் கிளிப் (அ) சேஃப்டி பின்னை குத்தி வையுங்கள். துவைக்கும்போது, அந்த இடத்தை எளிதில் கண்டுபிடித்து தனியாக அலசலாம்.

Offline MysteRy



முற்றிய தேங்காயை துண்டுகள் போடுவது சிரமமாக இருக்கும். தேங்காயை ஃபிரீசரில் பதினைந்து நிமிடங்கள் வைத்து, தண்ணீரில் கழுவி, கத்தியால் கீறிவிட்டால், சுலபமாக வந்துவிடும்.

Offline MysteRy

வீட்டைப் பூட்டிவிட்டு ஒன்றிரண்டு நாட்கள் வெளியூர் சென்று திரும்பினால்... வீடு முழுக்க எறும்பு, பூச்சிகள் என்று சமயங்களில் படுத்தி எடுத்துவிடும். ஊருக்குப் புறப்பட்டால்... எல்லா அறைகளின் (குளியலறையும் சேர்த்து) நான்கு மூலைகளிலும் பூச்சி மருந்து அடியுங்கள். சமையலறை சிங்க், வாஷ்பேஸின் ஆகியவற்றின் துவாரங்களில் நாஃப்தலின் உருண்டைகளைப் போடுங்கள். சமையலறை அலமாரிகளின் ஓரங்களில் லஷ்மண் ரேகாவினால் கோடு வரையுங்கள். அதன் பிறகு பாருங்கள்... பூச்சிகள் அண்டவே அண்டாது.

Offline MysteRy

நீங்கள் தயாரிக்கும் பதார்த்தம் எல்லாம் தேங்காய் எண்ணெய் மணத்துடன் இருக்க வேண்டுமா? மாவுடன் ஒன்றிரண்டு ஸ்பூன் துருவிய தேங்காய் கொப்பரையை (துருவிய கொப்பரையை 'டெஸிகேடட் கோகனட்' என்று டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் வாங்கலாம்.) சேர்த்துப் பிசையுங்கள்.... தேங்காய் எண்ணெய் சேர்க்காமலேயே சுவையும் மணமும் அபாரமாக இருக்கும்!

Offline MysteRy

கட்டிப் பெருங்காயத்தை சாம்பாரில் சேர்ப்பதாக இருந்தால், பருப்பை வேக வைக்கும்போதே அதனுடன் சேர்த்து விடுங்கள். இதனால் மணம் தூக்கலாக இருப்பதுடன், குறைந்த அளவு பெருங்காயமே போதுமானதாக இருக்கும்.

Offline MysteRy

குழந்தைகள் வீட்டில் விளையாடும்போது, பொம்மைகள் அத்தனையையும் எடுத்துப் போடாதீர்கள். வெகு விரைவில் அவற்றைப் பார்த்து சலிப்படைந்து விடுவார்கள். ஒவ்வொரு நாளும் ஒன்றிரண்டு பொம்மைகளாகக் கொடுத்து விளையாடச் செய்தால், விளையாட்டு ஆர்வம் பொங்குவதோடு, சலிப்பும் வராது. எதை வைத்து விளையாடுவது என்கிற குழப்பமும் வராது.

Offline MysteRy

ஒரு கரண்டி லேசான அவல், 3 கரண்டி பால், ஒரு ஸ்பூன் துருவிய தேங்காய், இனிப்புச் சுவைக்கு தேவையான சர்க்கரை அல்லது தேன் அல்லது மில்க்மெய்ட் ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் கலந்து கொள்ளுங்கள். பொடித்த பாதாம், உலர்ந்த திராட்சை, முந்திரி... எது கை வசம் இருந்தாலும் மேலே தூவி கிண்ணங்களில் நிரப்பி ஸ்பூனுடன் குழந்தைகளுக்கு கொடுங்கள். ஆவலுடன் சாப்பிடுவார்கள். முன்னதாகவே தயாரித்து ஃப்ரிட்ஜில் குளிர வைத்தும் கொடுக்கலாம்.

Offline MysteRy



நாப்தலின் உருண்டைகளை பினாயில் பாட்டிலுக்குள் போட்டு வைத்துவிடுங்கள். இப்படி பயன் படுத்தி வீட்டையும் குளியலறையையும் சுத்தம் செய்யும்போது, பூச்சிகள் அண்டாமல் இருக்கும்.

Offline MysteRy



துணிகளைத் துவைக்கும்போது ஷர்ட் காலரில் இருக்கும் அழுக்கை அகற்ற பிளாஸ்டிக் பிரஷ்ஷை பயன்படுத்தாதீர்கள். பாத்திரம் துலக்க பயன்படும் பிளாஸ்டிக் ஒயரினாலான சுருளை உபயோகித்தால், துணி சீக்கிரத்தில் நைந்து போகாமல் இருக்கும். புடவை ஃபால்ஸ்களில் படிந்த அழுக்கையும் இதுபோல் நீக்கலாம்.

Offline MysteRy



ஏலக்காய் சரியாக அரைபடாது. ஒரு துளி நெய்யில் இரண்டு நிமிடம் நிறம் மாறும் வரை வறுத்து, பிறகு மிக்ஸியில் பொடித்தால் நைஸாகப் பொடிந்துவிடும். இதை டப்பாவில் போட்டு மூடி வைத்தால் தேவைப்படும்போது உபயோகிக்கலாம்.

Offline MysteRy



கோதுமை தோசை வார்க்கும்போது, 'மெத்'தென்று துவண்டு சரியாக வார்க்க வராமல் போகும். கோதுமை மாவை வெறும் கடாயில் ஒன்றிரண்டு நிமிடங்கள் வறுத்து, பிறகு தண்ணீர் சேர்த்து கரைத்து தோசை வார்த்தால் நன்றாக வரும்.