Author Topic: ~ கீரை முறுகல் ~  (Read 530 times)

Online MysteRy

~ கீரை முறுகல் ~
« on: October 11, 2013, 04:10:02 PM »
கீரை முறுகல்



தேவையானவை:
கடலைப் பருப்பு, துவரம்பருப்பு - தலா அரை கப், எலுமிச்சைச் சாறு - 3 டீஸ்பூன், தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 8, கடுகு, உளுத்தம் பருப்பு - தலா அரை டீஸ்பூன், பொடியாக நறுக்கிய பாலக் (அ) ஏதேனும் ஒரு கீரை - 2 கப்.

செய்முறை:
பருப்பு வகைகளை ஒரு மணி நேரம் ஊற வைத்து, காய்ந்த மிளகாய் சேர்த்து அரைக்கவும். இதனுடன் கீரை, உப்பு சேர்த்து, சிறிய உருண்டைகளாகப் பிடித்து, இட்லித் தட்டில் வைத்து, குக்கரில் 10 நிமிடம் வெயிட் போடாமல் வேக விடவும்.

கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளிக்கவும். தேங்காய் துருவல், வெந்த கீரை உருண்டைகளைப் போட்டு உடையாமல் மெதுவாகக் கிளறி இறக்கவும். இதில் எலுமிச்சைச் சாறு கலந்து சுடச் சுட பரிமாறவும். விருப்பப்பட்டால் வதக்கும்போது வெங்காயம் சேர்க்கலாம்.