தேவையான பொருட்கள்:
ஜவ்வரிசி - 1 கப் உருளைக்கிழங்கு - 1/2 கப் (வேக வைத்து மசித்தது) கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது) உப்பு - தேவையான அளவு பச்சை மிளகாய் - 1 (நறுக்கியது) வேர்க்கடலை - 1/2 கப் (வறுத்து, ஓரளவு பொடி செய்தது) எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன் கோதுமை மாவு - 1/4 கப் எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஜவ்வரிசியை 1/2 கப் நீரில், 6-8 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். பின் ஊற வைத்த ஜவ்வரிசியில், எண்ணெய் தவிர மற்ற அனைத்து பொருட்களையும் சேர்த்து கெட்டியான பதத்தில் பிசைந்து கொள்ள வேண்டும். பிறகு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, சூடேற்ற வேண்டும்.
பின்பு அந்த மாவை உருண்டைகளாக பிரித்து, ஒவ்வொரு உருண்டையையும் பிளாஸ்டிக் ஷீட்டில் வைத்து வட்டமாக தட்டி, தோசைக்கல் சூடானதும், கல்லில் எண்ணெய் தடவி, தட்டி வைத்துள்ளதை போட்டு, எண்ணெய் ஊற்றி, முன்னும் பின்னும் வேக வைத்து எடுக்க வேண்டும்.
இதேப் போன்று அனைத்து மாவையும் ரொட்டிகளாக சுட்டு எடுக்க வேண்டும். இப்போது சுவையான ஜவ்வரிசி ரொட்டி ரெடி!!! இதனை கொத்தமல்லி சட்னி அல்லது உருளைக்கிழங்கு சப்ஜியுடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.