Author Topic: காதல் துளிகள்  (Read 500 times)

Offline Maran

காதல் துளிகள்
« on: October 08, 2013, 05:51:18 PM »


உன்
கூண்டுக்குள்
பிடிபட்ட
கிளிதான் நான்.
நீ.....
கிள்ளியெறியும்
நான்கு
நெல்மணிக்காகவா
சீட்டுக்களை
இழுத்துப்
போட்டுக்கொண்டிருக்கிறேன்
புரியாதவனே !




சபிக்கப்பட்ட
நாளொன்றில்
கெடு வைக்கிறான்
கொல்லவா இல்லை
கொள்ளவா
கொசுவை விட
மோசமானவன் !




பாடிக்கொண்டேயிருக்கிறேன்
யாரும்
கேட்கமாட்டார்களெனத்
தெரிந்தும்
அநாதரவற்ற
குளக்கரையோரத்தில்.....
குயிலெனச் சொன்னவன்
இப்போதெல்லாம்
கோட்டான்
என்கிறான் !




காப்பி குடிக்கிறாயா
என்று கேட்டால்
பார்சலில் அனுப்படி
என்கிறான்
நகைச்சுவைதான்
இருந்தும்
அவன் பாஷை
புரியவில்லை இன்னும் !




கனவுகள்
பலித்துக்கொண்டிருப்பதாய்
பறக்கிறான்
கனவுகளுக்கு
கால் முளைக்க
வைத்துக்கொண்டிருக்கிறேன்
நான் என்பதை அறியாதவன் !




பனிபூத்த நாளொன்றில்
நடந்த தடங்கள்
தெளிவாக
அள்ளியெடுக்க
கைச்சூடு தாங்காமல்
உருகி வழிகிறான்
திருடன்.....
இன்னும் ஊடலில்தானோ !




ஒற்றை விநாடிக்குள்
கொள்ளை போக
முடிகிறது
அன்பின்
முடிச்சுகளுக்குள்
மட்டுமே
இங்கே ஒருவன்
கொள்ளையடித்துக்கொண்டிருக்கிறான்
நான் பார்த்துக்கொண்டிருக்க
என்னையே !




கொஞ்சம் கோபமா
இல்லை நானயறியாத
ஊடலா
பேச வரமறுக்கும்
என்...
மௌனங்களை மொழிபெயர்த்து
தன்...
கவிதைகளாக்கியிருப்பான்
இந்நேரம்
நாளை பிரசுரமாகுமது !


- Anonymous

Offline Thavi

  • Sr. Member
  • *
  • Posts: 383
  • Total likes: 24
  • Total likes: 24
  • Karma: +0/-0
  • உயிர் பிரிந்தாலும் உன்னை பிரியாத வரம் வேண்டும்
Re: காதல் துளிகள்
« Reply #1 on: October 12, 2013, 12:20:27 AM »
wow nice machi kavithaiyoda inanchutinga pola very nice keep it up
நான் நேசிக்கும் நண்பர்கள் என்னை மறந்தாலும் என்னை நேசித்த நண்பர்களை நான் மறப்பதில்லை..