கீரை (அரைக்கீரை / சிறுகீரை / முளைக்கீரை) - ஒரு கட்டு
மிளகாய் வற்றல் - 5
புளி - 2 விரல் அளவு
உப்பு
தாளிக்க:
கடுகு, சீரகம், உளுந்து, கடலைப்பருப்பு, எண்ணெய், கறிவேப்பிலை
கீரையைச் சுத்தம் செய்து கால் கப் அளவு நீர் ஊற்றி உப்பு சேர்த்து மூடி போட்டு வேகவிடவும்.
வெந்ததும் அதனுடன் புளியைச் சேர்த்து மேலும் 2 நிமிடங்கள் வேகவைத்து எடுத்து ஆறவிடவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம், உளுந்து, கடலைப்பருப்பு, மிளகாய் வற்றல் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
மிக்ஸியில் கீரையுடன் தாளித்தவற்றைச் சேர்த்து தேவையான நீர் விட்டு நைசாக அரைக்கவும். (சட்னி பதத்திலிருக்க வேண்டும். உப்பு, புளி, காரம் சரிபார்த்துக் கொள்ளவும்).
சுவையான கீரை மசியல் தயார். வெறும் சாதத்தில் நெய் விட்டு, இந்த கீரை மசியல் சேர்த்து பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும்.