Author Topic: கொண்டைக்கடலை பிரியாணி  (Read 448 times)

Offline kanmani

தேவையான பொருட்கள்:

சாதத்திற்கு...

பாசுமதி அரிசி - 2 கப் (வேக வைத்தது)
புதினா - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
கொத்தமல்லி - 3 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
குங்குமப்பூ - 1 சிட்டிகை
குறைந்த கொழுப்புள்ள பால் - 1/2 கப்
எண்ணெய் - 1 டீஸ்பூன்

மசாலாவிற்கு...

கொண்டைக்கடலை - 1 கப் (இரவு முழுவதும் நீரில் ஊற வைத்தது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
குறைந்த கொழுப்புள்ள தயிர் - 1 கப்
தக்காளி - 3 (நறுக்கியது)
உருளைக்கிழங்கு - 2 (வேக வைத்து நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 2 கப் செய்முறை:

மசாலாவின் செய்முறை...

முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் கொண்டைக்கடலையை கழுவிப் போட்டு, தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து 4-5 விசில் விட்டு இறக்கி குளிர வைக்க வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து தாளித்து, மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லி தூள் சேர்த்து 2 நிமிடம் கிளறி விட வேண்டும்.
அடுத்து நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து 4-5 நிமிடம் வதக்க வேண்டும். பின்பு உருளைக்கிழங்கு, பச்சை மிளகாய், தயிர் சேர்த்து கிளறி, 5-6 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பிரியாணி செய்முறை...

குங்குமப்பூவை பாலில் போட்டு தனியாக ஊற வைக்க வேண்டும். பின் கொத்தமல்லி, புதினா மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றை சாதத்துடன் சேர்த்து, எண்ணெய் தடவிய பேக்கிங் ட்ரேவில் பாதியை போட்டு ஒரு லேயர் தயாரித்து, அதன் மேல் பாதி மசாலாவை தூவ வேண்டும்.

அடுத்து அதன் மேல் மீதமுள்ள சாத்தை பரப்பி, குங்குமப்பூ பாலை ஊற்றி, இறுதியில் மீதமுள்ள மசாலாவை தூவி, அதன் மேல் அலுமினியம் கவர் சுற்றி, மைக்ரோ வேவ் ஓவனில் 200 டிகிரியில் 20 நிமிடம் வைத்து இறக்கினால், சுவையான கொண்டைக்கடலை பிரியாணி ரெடி!!!