Author Topic: சிந்தி பாஜி ரெசிபி  (Read 457 times)

Offline kanmani

சிந்தி பாஜி ரெசிபி
« on: October 07, 2013, 09:27:48 AM »
தேவையான பொருட்கள்:

பசலைக் கீரை - 3 கட்டு
வெந்தயக் கீரை - 1/2 கட்டு
தில் இலைகள் - 1/4 கட்டு
கடலைப் பருப்பு - 1/2 கப்
உருளைக்கிழங்கு - 3 (துண்டுகளாக்கப்பட்டது)
கத்திரிக்காய் - 1 (நறுக்கியது)
தக்காளி - 2 (நறுக்கியது)
சீரகம் - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
இஞ்சி - 1 துண்டு (துருவியது)
மல்லி தூள் - 2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - 2 கப்

செய்முறை:

முதலில் கீரைகளை நன்கு நீரில் அலசி, நறுக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம் சேர்த்து தாளித்து, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து 1 நிமிடம் வதக்க வேண்டும். பின்பு உருளைக்கிழங்கு, கத்திரிக்காய் மற்றும் தக்காளி சேர்த்து, 3-4 நிமிடம் வதக்க வேண்டும்.

பின் மல்லி தூள், மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கிளறி, நறுக்கி வைத்துள்ள கீரைகளை சேர்த்து, மீண்டும் 3-4 நிமிடம் வதக்கி விட வேண்டும்.

அடுத்து உப்பு சேர்த்து, 5 நிமிடம் கிளறி, கடலைப்பருப்பை கழுவி சேர்த்து, தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி தீயை குறைவில் வைத்து, 2 விசில் விட்டு இறக்க வேண்டும்.

விசிலானது போனதும், குக்கரை திறந்து, அதனை மத்து கொண்டு கடைந்தால், சுவையான சிந்தி பாஜி ரெடி!!! இதனை சாதத்துடன் சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.