Author Topic: பாகற்காய் எள்ளு பச்சடி  (Read 375 times)

Offline kanmani

பாகற்காய் எள்ளு பச்சடி
« on: October 07, 2013, 09:23:51 AM »
தேவையான பொருட்கள்:

பாகற்காய் - 2
பச்சை மிளகாய் - 4 (நீளமாக கீறியது)
புளி - பெரிய நெல்லிக்காய் அளவு (ஒரு கப் தண்ணீரில் ஊற வைத்தது)
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
நாட்டு சர்க்கரை - 1 டீஸ்பூன்

வறுத்து அரைப்பதற்கு...

துவரம் பருப்ப - 1 டேபிள் ஸ்பூன்
வரமிளகாய் - 3
எள் - 1 டேபிள் ஸ்பூன்

தாளிப்பதற்கு...

கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் பாகற்காயை இரண்டாக நறுக்கி, அதில் உள்ள விதைகளை நீக்கி, சிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும். பின் கொதிக்கும் நீரில் அதனைப் போட்டு 1-2 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.

பின்பு ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் துவரம் பருப்ப, வரமிளகாய் சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். அதே கடாயில் எள் சேர்த்து 1 நிமிடம் வறுத்து இறக்க வேண்டும்.

பிறகு மிக்ஸியில் வறுத்த அனைத்து பொருட்களையும் சேர்த்து பொடி செய்து கொள்ள வேண்டும். பின்னர் புளியை கரைத்து வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

 பின் மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத் தூள், கறிவேப்பிலை சேர்த்த தாளிக்க வேண்டும். அடுத்து பச்சை மிளகாய் மற்றும் பாகற்காய் சேர்த்து சிறிது நேரம் வாக்க வேண்டும்.

பின்பு புளிச்சாற்றினை ஊற்றி, மஞ்சள் தூள், உப்பு மற்றும் நாட்டு சர்க்கரை சேர்த்து கிளறி, பச்சை வாசனை போக கொதிக்க விட்டு, இறுதியில் அரைத்து வைத்துள்ள பொடியை தூவி கிளறி, மீண்டும் 2 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால், சுவையான பாகற்காய் எள்ளு பச்சடி ரெடி!!!